தேர்தல் நெருங்குவதால், வாகனங்களில், அதிக பணத்தை எடுத்துச் செல்ல, தேர்தல் ஆணையம், கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. 

ஆனால், வாக்காளர்களுக்கு கொடுக்க பணம், ஆதரவாளர்கள் தங்கும் செலவு, ஆரத்தி எடுப்பவர்களுக்கு பரிசளிக்க செலவு என பணமில்லாமல் என்ன செய்வது? எப்படி போனாலும் தேர்தல் பறகும் படை கிடுக்குப்ம் பிடி போடுவதால் பலமாக யோசித்த அரசியல்வாதிகள் தற்போது புதிய ரூட்டை கண்டு பிடித்து இருக்கிறார்கள். பணத்தை ஒவ்வொரு ஊருக்கும் கொண்டு போக, அள்ளும் வாகனங்களில் வைத்து பணத்தை கடத்திச் செல்கிறார்களாம். பணத்தை கீழே வைத்து, அதற்கு மேல் குப்பைகளை அள்ளிப் போட்டு, யாருக்கும் சந்தேகம் வராமல், படுபத்திரமாக கொண்டு சேர்க்கிறார்களாம்.

 

இந்த ரூட்டை அரசியல்வாதிகளே வெளியில் கூறி தங்களது சாமர்த்தியை தம்பட்டமடித்து வருகிறார்கள். ஆக இனி தேர்தல் பறக்கும் படை குப்பை வண்டிகளை நிறுத்தி குப்பைகளை கிளறினால் கோடி கோடியாக பணத்தை பறிமுதல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.