Asianet News TamilAsianet News Tamil

மேதகு கவர்னர் துரைமுருகன்: எந்த மாநிலம் எசகுபிசகா சிக்கப்போவுதோ?! அய்யகோ!

*    நான் படிச்சு ஐ.பி.எஸ். அதிகாரியா  ஆகணும்னு நினைச்சேன். ஆனால் எங்க அண்ணனை ஸ்டெர்லைட் போராட்டத்துல போலீஸ் சுட்டுக் கொன்னதுல இருந்து போலீஸ் மேலே இருந்த மரியாதை போயிடுச்சு. எந்த வேலைக்குன்னாலும் போவேன், ஆனா போலீஸ் வேலைக்கு மட்டும் போக மாட்டேன்: காளியப்பனின் தங்கை ரதி.
 

political shot news collage
Author
Chennai, First Published May 9, 2019, 1:24 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

*    நான் படிச்சு ஐ.பி.எஸ். அதிகாரியா  ஆகணும்னு நினைச்சேன். ஆனால் எங்க அண்ணனை ஸ்டெர்லைட் போராட்டத்துல போலீஸ் சுட்டுக் கொன்னதுல இருந்து போலீஸ் மேலே இருந்த மரியாதை போயிடுச்சு. எந்த வேலைக்குன்னாலும் போவேன், ஆனா போலீஸ் வேலைக்கு மட்டும் போக மாட்டேன்: காளியப்பனின் தங்கை ரதி.
(உலகின் தலை சிறந்த பொய் ‘போலீஸ் உங்களின் நண்பன்’ சகோதாரி.)

*    பழனிச்சாமியின் மரண செய்தியை கேட்டு என் கணவர் மார்ட்டின் மிகுந்த வேதனையடைந்துள்ளார். பழனிசாமியின் குடும்பத்துக்கு நாங்கள் உறுதுணையாக என்றும் இருப்போம்: லீமா ரோஸ் 
(கசாப்புக் கடைக்காரன் வெட்டுறதுக்கு முன்னாடி ஆடுக்கு தீவனம் போடுறதுல ஆச்சரியமில்லை, ஆனா பிரியாணிய பார்த்து பாய் கண்ணீர் விடுறதுதான் கடுப்பேத்துது.)

*    என்னைப் பற்றி அவதூறு கிளப்பி, மீண்டும் என்னை சாதிய சாக்கடைக்குள் தள்ளிவிட முயற்சிக்கின்றனர் எதிர் அணியினர்:     திருமாவளவன். 
(ஆமாண்ணே, நமக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தமிருக்குது? ஏதாச்சும் சாதிய வெச்சா நாம கட்சி நடத்துறோம், இல்லே ஒரு குறிப்பிட்ட சாதியோட நன்மைக்குன்னு சொல்லியா மேடையில முழங்குறோம்?)

*    சீட் கிடைக்காத விரக்தியில் இருக்கும் சூலூர் தொகுதி மாஜி அ.தி.மு.க. அமைச்சர் செ.ம.வேலுசாமி, ‘ எனக்குன்னு தனி ஆதரவாளர்கள் பல ஆயிரக்கணக்குல இந்த தொகுதியில் இருக்கிறாங்க. நினைவிருக்கட்டும்.’ என்று சொல்லி ஆளும் அணிக்கு பேதி மாத்திரை கொடுக்கிறார்: செய்தி. 
(க்கும், புள்ளையாரே மூஞ்செலியில போயிட்டிருக்காரு. இதுல பூசாரிக்கு புல்லட்டு கேக்குதா? ஆனானப்பட்ட எடப்பாடியார் நிலவரமே கலவரமா கெடக்குற நேரத்துல, மாஜி செ.ம.வுக்கு இந்த மப்பு தேவையா?)

*    உதயநிதியை சென்னையின் மேயர் பதவிக்கு போட்டியிட வைக்கவும், காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் துரைமுருகனை ஏதோ ஒரு மாநில கவர்னராக்கிவிடவும் தி.மு.க.வின் உயர் நிர்வாகிகள் யோசனை: செய்தி. 
(முதல் யோசனையாச்சும் ‘எல்லாம் நம்ம தலையெழுத்து’ன்னு விட்டுத் தொலையலாம். ஆனால் இந்த ரெண்டாவதை நினைச்சால்தான் வயிறு கலங்குது. கிரண்பேடியெல்லாம் பிச்சையெடுக்குற அளவுக்கு அந்த முதலமைசருக்கு எதிராக தலைமை செயலகத்துக்கு வெளியில துரை நடத்தப்போகும் ஆட்டத்தை நினைச்சா...)

Follow Us:
Download App:
  • android
  • ios