கடந்த ஒரு மாதமாக சுட்டெரிக்கும் வெயிலில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு, வரும் ஞாயிற்றுக்கிழமை, மீன் வறுவல், மட்டன் பிரியாணி என திமுக அதிமுக கட்சிகள் தடபுடல் விருந்து வைக்க உள்ளதகா தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒரு மாதமாக சுட்டெரிக்கும் வெயிலில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு, வரும் ஞாயிற்றுக்கிழமை, மீன் வறுவல், மட்டன் பிரியாணி என திமுக அதிமுக கட்சிகள் தடபுடல் விருந்து வைக்க உள்ளதகா தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பை, கடந்த மார்ச், 10ல் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, திமுக அதிமுக தலைவர்கள், கூட்டணி கட்சிகள், தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரு கட்சிகளும், சம பலத்துடன் கூட்டணி அமைந்துள்ளதால் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களிடம் தங்களின் பலத்தைக் காட்டுவதற்காக, பிரசாரத்திற்கு செல்லும் போது, 200 பேர் வரை அழைத்து செல்கின்றனர். அதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்.

அவர்களுக்கு, அதிமுக தரப்பில், தினமும் காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு டிபனுடன், 300 ரூபாயும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக கூட்டணி கட்சிகள் தரப்பில், 200 ரூபாய் முதல் 300 வரை கொடுக்கப்படுகிறதாம், மேலும், ஆண்களுக்கு குவார்ட்டர் பாட்டிலும்; பெண்களுக்கு, புடவை, சமையல் பாத்திரங்களும் வழங்கப்படுகின்றன. 

இந்நிலையில் தேர்தல் பிரசாரம், வரும், 16ம் தேதி மாலை முடிகிறது. இதையடுத்து, பிரசாரத்திற்கு வந்தவர்களுக்கு, வரும் ஞாயிறன்று, திமுக - அதிமுக வேட்பாளர்கள், தடபுடல் கறிவிருந்து வைக்க உள்ளனர்.

இந்த விருந்தில் மீன் வறுவல், இறால் பிரை, மட்டன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை பொரியலுடன், தடபுடல் விருந்து வைக்க உள்ளனர். இதற்காக, அவர்கள், சமையல்காரர்களை, புக் செய்து வருகின்றனர். பிரசாரத்திற்கு வந்தவர்களுக்காக, நாங்கள் வழங்கிய பணத்தை, கட்சியினர் முழுவதுமாக வழங்கவில்லை. பேசிய பணம் கிடைக்காத அதிருப்தியிலும், கடந்த ஒரு மாத காலமாக கொளுத்தும் வெயிலிலும், அவர்கள், எங்களுக்காக பிரசாரத்திற்கு வந்தனர். அவர்களின் வாய் வாழ்த்தவில்லை என்றாலும், அவர்களின் வயிறு எங்களை வாழ்த்தும். அதனால், தடபுடல் விருந்து வைக்க வேட்பாளர்கள் மும்முரமாக உள்ளார்களாம்.