அப்படிப்போடு...தமிழகத்தில் 4 முனை போட்டி.? நினைத்த மாதிரியே  நடக்கும் போல....

வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை சூடு பிடித்து உள்ளது. அதன்படி தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவவே அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாநில கட்சிகள் தவிர்த்து தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தமிழகத்தில் காலூன்ற பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அப்படி பார்த்தால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில், பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, புதிய தமிழகம், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகியவையும், தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவையும் இடம்பெறும் என தெரிகிறது.

இதில் திமுக வும் சரி அதிமுகவும் சரி குறைந்தது 25 தொகுதிகளிலாவது போட்டி இட வேண்டும் என உறுதியாக உள்ளது. திமுக உடன் கூட்டணி வைக்க உள்ள ம.தி.மு.க. திருச்சி, ஈரோடு, விருதுநகர், தென்காசி ஆகிய  இடங்களில் போட்டியிட திட்டமிட்டு உள்ளது. ஆனால் மதிமுகவிற்கு 4 இடங்கள் கிடைக்குமா என்பதில் சந்தேகமே..

அதே போன்று  திருச்சி தொகுதிக்கு மட்டும் திருநாவுக்கரசு  மற்றும் வைகோ இருவருமே போட்டியிட ஆர்வம் காட்டி வருவதால், தற்போதைய சூழலில் ஒரு குழப்பம் நிலவி வருகிறது. ஆக மொத்தத்தில் திமுக உடனான மற்ற கட்சி கூட்டணி குறித்து உறுதி பட எந்த அறிவிப்பும் இல்லை.

இதே போன்று அதிமுக தரப்பிலும், பாஜக 8 இடங்களும், பாமக 8 இடங்களும் கேட்டு உள்ளதாக தெரிகிறது. தேமுதிகவிற்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளத்தக்க தெரிய வந்துள்ளது.ஆனாலும், பாமகவும், பாஜகவும் கூடுதல் இடங்களை கேட்டு வருவதால் இங்கேயும் இழுபறியான சூழல் தான் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தேதி வெளியான பிறகே, யாருடன் யார் கூட்டணி எத்தனை தொகுதி என அனைத்து விவரமும் அறிவிப்பாக வெளிவரும். அதுவரை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சுறுசுறுப்பாக நடந்து வரும்.

இது போக மக்கள் நீதி மய்யம் கமல் தனித்து போட்டி இட உள்ளதாக தெரிகிறது. அதே போன்று, டி டி வி தினகரனும் தனித்து போட்டியிட  முடிவு செய்து உள்ளதால் தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவவே வாய்ப்பு உள்ளது என்கிறது அரசியல் விமர்சனங்கள்.