Asianet News TamilAsianet News Tamil

அப்போ இனித்த குஷ்பு... இப்போ கசக்குதா?

*    கோவையில் பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏழை ஆண்கள், பெண்கள் காசு கொடுத்து ஏராளமான பஸ்களில் அழைத்து வரப்பட்டனர்: செய்தி. 
 

political and tamilnadu top news
Author
Chennai, First Published Apr 10, 2019, 4:02 PM IST

*    கோவையில் பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏழை ஆண்கள், பெண்கள் காசு கொடுத்து ஏராளமான பஸ்களில் அழைத்து வரப்பட்டனர்: செய்தி. 

(வசிக்க வீடு இல்லாமல் ஃப்ளைட்லேயே படுத்து தூங்கி, பிரஷ் பண்ணி, குளிச்சு, சாப்பிட்டு வாழும் ஒரு ஏழைத்தாயின் மகனை பார்க்க, ஏழை மக்கள் அன்பளிப்பு மற்றும் ஊக்கத்தொகை கொடுத்து அழைத்து வரப்படுறது ஒரு குத்தமாய்யா! என்ன நாடுங்ணா இது?)

*    எங்களை பி.ஜே.பி.யின் தேசிய  தலைவர் அமித்ஷா அழைத்து பேசினார். அதனால் பார்க்க சென்றோம். அப்போது, விவசாயிகளின் ஆறு கோரிக்கைகளில் ஐந்தை நிறைவேற்றிவிட்டதாக கூறினார். அதற்கு சந்தோஷம் என கூறிவிட்டு வந்தோம்: அய்யாக்கண்ணு. 
(தலைநகர்ல உங்க டீம் பிறந்த மேனியில தாறுமாறான போராட்டம் நடத்துனப்ப ஒரு டவல் கூட கொடுக்காத  மனிதர், இப்போ உங்களை கூப்பிட்டார்னா நீங்க போவீங்க, வெறும் வாக்குறுதிகளுக்கே சந்தோஷப்படுவீங்க. அய்யா கண்ணு....பப்பு வேகலையே! நாங்க பப்புன்னு சொன்னது பருப்பை)

*    ’நதிகள் இணைப்புக்கு ஆணையம் அமைக்கப்படும்!ன்னு பி.ஜே.பி. சொன்னதை வரவேற்கிறேன்.’ அப்படின்னு ரஜினி சார் சொன்ன சாதாரண ஸ்டேட்மெண்டுக்கு ஏன் இவ்வளவு சப்தம் எழுப்புறீங்க ஊடகங்கள்?: குஷ்பூ. 
(க்கும், இப்ப மட்டும் ஊடகங்களோட சப்தம் கசக்குதோ மேடம்? ருத்ராட்ச கொட்டையில் தாலி, கற்பு பற்றி கசமுசா கருத்துக்கள்-ன்னு நீங்க சொன்னப்ப ஊடகங்கள் அதை வைரலாக்குனப்பல்லாம் கம்முன்னு ரசிச்சீங்களே! வாட் இஸ் திஸ் குஷ்பூ?)

*    தமிழகத்தில் ஏழாயிரத்து எழுநூற்று எண்பது வாக்கு பதிவு மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது: சத்யபிரதா சாஹு. 
(தல, இதெல்லாம் இப்போதைய நிலைமை. ஆளும் கூட்டணிக்கு ஆதரவில்லைன்னு கடைசி நேரத்துல தகவல் ஏதாச்சும் வந்து விழட்டும், அப்புறம் மொத்த தமிழ்நாடுமே பதற்றமான வாக்குப்பதிவு மாநிலமா மாறுறதை நீங்க இருந்த இடத்துல இருந்தே பார்ப்பீங்க.)

*    கோவை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுக்கவே நிலவும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக எனக்கு முன்பு வழங்கப்பட்டதை போல் பாதுகாப்பு வேண்டும்: பொள்ளாச்சி ஜெயராமன். 
(வர்ரே வாவ்! ஒரு மாநிலத்தின் சட்டமன்ற துணை சபாநாயகரே அந்த மாநிலத்தின் சட்ட ஒழுங்கில் அசாதாரண சூழல் நிலவுது, பாதுகாப்பு வேணுமுன்னு கேக்குறார் அப்படின்னா, தேர்தல் ஆணையமும், குடியரசு தலைவரும் என்ன பண்ணிண்டு இருக்கேள்?)

Follow Us:
Download App:
  • android
  • ios