police security for madhusudhanan home
ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுகவின் சசிகலா அணியில் டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். அணியில் மதுசூதனன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, பாஜகவில் இசையமைப்பாளர் கங்கைஅமரன் உள்பட பலர் போட்டியிடுகின்றனர்.
ஏற்கனவே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனக்கு மிரட்டல் வருவதாக கூறிவந்தார். இதை தொடர்ந்து, ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மதுசூதனன் தரப்பில் நேற்று டிஜிபி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

அதில், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதைதொடர்ந்து இன்று காலை முதல் மதுசூதனன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
