police parade in thoothugudi

அரசு மருத்துவமனையில் இறந்தவர்கள் உடல் வைக்கப்பட்டுள்ளது அதனால் உடலை பார்க்க உறவினர்கள் குவிந்தனர். அவர்களுக்கு எதிராக காவல்துறை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் மீண்டும் 2முறை வானை நோக்கி சுட்டு எச்சரிக்கை விடுத்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெட்ரோல் குண்டு வீசினர். மேலும் காவலர் வாகனத்திற்கு தீ வைத்து தப்பியோடினர் போராட்ட மக்கள்.

சாலையோரமிருந்த வாகனத்தில் தீ வைத்ததில் மீண்டும் பதட்ட நிலையை அடைந்துள்ளது. பின் வந்த தீயணைப்பினர் போராடி தீயை அணைத்தனர்.

வாகனம் தீ வைக்கப்பட்ட்தையொட்டி தூத்துக்குடி பிரையண்ட் நகரில் போலீஸ் அணிவகுப்பு நடத்தினர். 50க்கும் மேற்பட்ட வாகனத்தில் போலீஸ் அணிவகுப்பு நடத்தினர். 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் பொதுஇடங்களில் ஒன்று கூட வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர்