Police hit the Jackpot Rs480 crore in the 39 police stations 3000 homes

தமிழக அரசின் 2017ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் காவல்துறையினருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இதுதொடர்பாக நிதியமைச்சர் ஜெயகுமார், காவல் துறையினருக்கான சலுகைகள் குறித்து தெரிவித்துள்ளதாவது.
தமிழகம் முழுவதும் ரூ.30 கோடியில் 39 காவல் நிலைய கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்படும். காவலர்களின் குடும்பங்களுக்காக ரூ.450 கோடியில் 3000 வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.
குற்றவாளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க நவீன கருவிகள் வழங்கப்படும். குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த கூடுதல் வாகனங்கள் வழங்கப்படும்.
இளைஞர் காவல் படையில் 10,500 காலி பணியிடங்கள் சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred