மறைந்த கருணாநிதியின் தொகுதியான திருவாரூரில் ஜனவரி 28ஆம் தேதி இடைத் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டவுடன் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. 

ஒரு பக்கம் செம்ம ஸ்பீடாக வேட்பாளர் அறிவித்த தினகரன், இன்னொரு பக்கம் தேர்தலுக்கு தடைகேட்டு ஒரு கூட்டத்தை கோர்ட்டுக்கு அனுப்பிவிட்டு வேட்பாளரை காட்டிய திமுக. மற்றொரு பக்கம் தேர்தல் நடக்குமா நடக்காதா என யோசித்துக்கொண்டே நேர்காணல் நடத்தும் அதிமுக,  இப்படி செம்ம  சூடாக நகர்கிறது தமிழக அரசியல் களம். 

இந்நிலையில், பிரசாரம் தொடங்கும் முன்பாக திருவாரூர் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவர் விளம்பரம் செய்ததாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் விதிகளை மீறியதாக போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் பல பிரிவுகளில் வழக்கு பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.