Asianet News TamilAsianet News Tamil

உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிர்ந்துபோன பாஜக..! எதிர்க்கட்சிகளின் திட்டத்தை தடுக்கவே எக்ஸிட் போலா..?

மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மத்தியில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று பிரபல தனியார் தொலைக்காட்சிகள் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

PMModi shock... Intelligence report
Author
Delhi, First Published May 21, 2019, 5:28 PM IST

மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மத்தியில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று பிரபல தனியார் தொலைக்காட்சிகள் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களவை தேர்தல் முடிவடைந்து நாளை மறுநாள் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிகம் இடம் கிடைக்கும் என்று பிரபல ஊடகங்கள் அனைத்தும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் உளவுத்துறை மூலமாக பாஜக ஒரு சர்வே எடுத்துள்ளது. அந்த சர்வே ரிப்போர்ட் பாஜக மேலிடத்திற்கு சென்றுள்ளது.

 PMModi shock... Intelligence report

அதில் பாஜகவுக்கு சாதகமாக சூழல் நிலவி வந்தாலும் தலைமை கொஞ்சம் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசி கட்ட தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே டைம்ஸ் நவ் ஊடகம் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டது. அதில் பாஜக அணி- 306 இடங்களையும், காங்கிரஸ் அணி- 132 இடங்களையும், இதர கட்சிகள் 132 இடங்களையும் பிடிக்கும் என தெரிவித்துள்ளது. இந்த கருத்து கணிப்பு முடிவுகள் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இடையே பல்வேறு கேள்வி எழுப்பியுள்ளது. PMModi shock... Intelligence report

இதனால் பாஜக உளவுத்துறை மூலமான ஒரு அறிக்கை கேட்டிருந்தது. அந்த அறிக்கையை கண்டு பாஜக தலைமை அதிர்ச்சியடைந்தது. அதன்படி பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மைக் கிடைக்காது, தொங்கு நாடாளுமன்றம் அமைக்க முடியும் என அறிக்கை அளித்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் பின்னணி தொடர்பாக விசாரித்த போது எதிர்க்கட்சிகளின் திட்டத்தை தடுக்கவே இதுபோன்ற ஆயுதத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. PMModi shock... Intelligence report

மேலும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் என்ன இடம் என்பதையெல்லாம் பேசி இறுதி செய்து குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பம் அளித்துவிடாமல் தடுக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் மே 23-ம் தேதி எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை திசை திருப்பவே இந்த எக்ஸிட் போல் ரிப்போர்ட் என டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios