கல் வைத்துக் கூட மாம்பழத்தை பழுக்க வைக்க முடியவில்லை. ஆனாலும், ஏற்கெனவே துண்டு போட்டு வைத்திருக்கும் ராஜ்யசபா சீட்டை எதிர்பார்த்து அதிமுகவிடம் அடக்கியே வாசித்து வருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். 

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமகவுக்கு 7 மக்களவை தொகுதிகளும் ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டது. 7 தொகுதிகளிலும் மண்ணை கவ்வியது பாமக. ஆகையால் ராஜ்யசபா சீட் கேட்டு வருகிறார் ராமதாஸ். அதை பெறுவதற்காக அதிமுகவை விமர்சிக்காமல் பாஜகவுக்கு அறிவுரை சொல்லி வருகிறார். 

அதே சமயம் மத்திய அமைச்சரவையில் சேர டெல்லி தலைவர்கள் மூலம் முயற்சி செய்து வர்றாரார் ராமதாஸ். ராஜ்யசபா சீட் உறுதியாகி டெல்லிக்கு போனதும் முதல் வேலை அமைச்சர் பதவியை பெறுவது தான். இதையும் பனதில் வைத்துக் கொண்டே அடக்கி வாசித்து வருகிறார். ஆனால், பாஜக தரப்போ, எட்டுவழிசாலையில் பிரச்னையை கிளப்பும் பாமவுக்கு ராஜ்யசபா சீட் தரக்கூடாது. அதற்கு பதில் அந்த சீட்டை எங்கள் கட்சியை சேர்ந்தவருக்கு தர வேண்டும். அதற்கு பிரதிபலனாக உங்களுக்கு வேறு ஒரு திட்டம் வைத்துள்ளோம்’’ அதிமுகவை சரிக்கட்டி வருகிறார்கள்.

 

ஆனால் பாமகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக நாங்கள் ஒப்பந்தம் போட்டு இருக்கிறோமே’ என சொல்லி இருக்கிறது அதிமுக தரப்பு. அதற்கு பாஜக தரப்பு, ’ஜெயலலிதா இருக்கும்போது பாமக கூட்டணி அமைத்து இதேபோல் ஒப்பந்தம் போட்டார். ஆனால் சொன்னது போல் தோல்விக்கு பிறகு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லையே. அதே காரணத்தை நீங்களும் சுட்டிகாட்டுங்கள்’’ எனக் கூறி இருக்கிறார்கள். பாஜகவே சப்போர்ட் செய்யும்போது அதிமுக அதனை கேட்காமல் இருக்குமா? ஆகையால், இந்த விவகாரத்தில் பாமகவை ஏமாற்ற அதிமுகவை உந்துகிறது பாஜக.