நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பிஜேபி கூட்டணி படு தோல்வியை சந்தித்துள்ளது. இந்த கூட்டணியில் அதிமுக மட்டுமே ஒரு தொகுதியில் வென்றது. அதுவும் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத் வெறும் 70000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றிபெற்றார். 

ஆனால், ஓவர் கிராக்கி காட்டி, மாறி மாறி பேரம் நடத்தி கூட்டணி போட்ட தேமுதிகவும், வட மாநிலங்களில் வல்லுணவான வாக்கு வங்கி எங்களுக்கு இருக்கு என சொல்லி 7 சீட்டை ஆட்டையை போட்ட அன்புமணி கட்சிக்கும் இதுவரை இல்லாத அளவிற்கு மரண அடி விழுந்துள்ளது. அதிலும் அன்புமணியில் நிலையோ பரிதாபம். இதற்க்கு காரணம் அதிமுக மொத்தமும் இடைத்தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தியதும், உள்ளடி வேளையில் இறங்கியுள்ளதும் கூட்டணி கட்சிகளே ஆதாரத்தோடு காட்டுகிறது.

இதில் அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் கதறி அழும் நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், அதிமுக, ஓட்டுகளால், தான் திமுக, வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றது குறித்து, விரைவில் விசாரணை நடக்கவுள்ளது.

வேலுார் மாவட்டம், அரக்கோணம் லோக்சபா தேர்தலில், திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், பாமக வேட்பாளர் மூர்த்தி உட்பட, 19 பேர் போட்டியிட்டனர். ஜெகத்ரட்சகன், 6 லட்சத்து, 72 ஆயிரத்து, 190 ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார். அடுத்தபடியாக, பாமக வேட்பாளர் மூர்த்தி, 3 லட்சத்து, 43 ஆயிரத்து, 234 ஓட்டுகள் பெற்றார்.அரக்கோணம் லோக்சபா தொகுதியில், திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி ஆகிய, 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், 3 தொகுதிகளில், திமுக எம்எல்ஏக்களும், இரண்டில், அதிமுக எம்எல்ஏக்களும் உள்ளனர். 

அடுத்ததாக, சோளிங்கர் சட்ட சபை தொகுதி இடைத் தேர்தலில், அதிமுக, வெற்றி பெற்றது.கடந்த, 2014 தேர்தல் கணக்குப்படி, அதிமுக கூட்டணிக்கு, 7.27 லட்சம் ஓட்டுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், ஜெகத்ரட்சகன், அதிமுக., நிர்வாகிகளை விலைக்கு வாங்கி விட்டார் என, பாமகவினர் குற்றம் பகிரங்க குற்றச்சாட்டை முன்பவைக்கின்றனர். 

இது குறித்து பாமக சொல்லும் காரணங்கள் நியாயம் உள்ளதாகவே சொல்லப்படுகிறது, பாமகவுக்கு கிடைக்க வேண்டிய, அதிமுக ஓட்டுகள், 3 லட்சத்தில், 90 சதவீதம் வாக்குகள் அப்படியே திமுகவுக்கு கிடைத்துள்ளன. இதனால், அவர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டார். பாமக, ஓட்டுகள் மட்டுமே மூர்த்திக்கு கிடைத்துள்ளன. உள்ளடி வேலை செய்த, அதிமுக, நிர்வாகிகள் பட்டியல், அக்கட்சி மேலிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. நாங்கள் கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்ததால், சோளிங்கர் சட்டசபை இடைத்தேர்தலில், அதிமுக, வேட்பாளர் சம்பத் ஜெயித்தார் என சொல்கிறார்கள்.

ஆனால், அதிமுக முக்கிய புள்ளிகள் சிலரோ, திமுக கூட்டணியில் நின்றதோ, வன்னிய சமூகத்தைச்சேர்ந்த ஜகத்ரட்சகன் என்பதால் பாமக வாக்குகள் தான் ஜகத்ரட்சகனுக்கு விழுந்துள்ளது என பல்டி அடிக்கின்றனர்.