அதில், ’’பள்ளிகளில் சேருவதில் எளிமையான அணுகுமுறை, வலிமையான உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் தமிழகம் முதலிடம் வகிப்பது பாராட்டத்தக்கது. அதேநேரத்தில் ஒட்டுமொத்த கல்வித் தரத்தில் 7-ஆவது இடத்தில் உள்ள தமிழகம் முதலிடத்தை பிடிக்க மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும்.

சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சிப் பூங்காவில் நடைபெற்ற விழாவில் புவிவெப்பமயமாதலை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தி இருப்பது  மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தக்கட்டமாக இந்தியாவில் காலநிலை அவசரநிலையை பிரகடனம் செய்யவும் பிரதமர் முன்வர வேண்டும். 

புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த அரசுகளும், நிறுவனங்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தினகரன் நாளிதழ் தலையங்கம் தீட்டியிருப்பது பாராட்டத்தக்கது. பிற தமிழ் ஊடகங்களும் புவிவெப்பமயமாதல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும்!

— Dr S RAMADOSS (@drramadoss) October 1, 2019 />

 

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த அரசுகளும், நிறுவனங்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தினகரன் நாளிதழ் தலையங்கம் தீட்டியிருப்பது பாராட்டத்தக்கது. பிற தமிழ் ஊடகங்களும் புவிவெப்பமயமாதல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும். 

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட சிக்கிம் முதலமைச்சர் பிரேம்சிங் தமாங் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடைக்காலத்தை 6 ஆண்டுகளில் இருந்து 1.1 ஆண்டாக தேர்தல் ஆணையம் குறைத்தது கண்டிக்கத்தக்கது. ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். சென்னையில் தான் தமிழ் மொழி வேகமாக வளர்கிறது. மருத்துவமனைக்கு ஆங்கிலத்தில் Motherhood என்று பெயர்வைத்து விட்டு, அதை தமிழில் மொழிபெயர்க்காமல் மதர்ஹுட்  என்று எழுத்துப்பெயர்த்து எழுதி இருக்கிறார்கள். இதேபோல் இன்னும் ஆயிரமாயிரம் உதாரணங்களைக் கூற முடியும். தமிழ் வாழ்க..!’’ என அவர் பதிவிட்டுள்ளார்.