தீபாவளிக்கு கோடிக்கணக்கில் மது விற்பதெல்லாம் ஒரு சாதனை இல்லை.. வேதனை..! ராமதாஸ் கடும் விளாசல்

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுவதெல்லாம் சாதனையல்ல; வேதனை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

pmk ramadoss criticizes tasmac sales on diwali

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் மற்றும் திருவிழா, திருமணம் போன்ற கொண்டாட்டங்களின்போது மது அருந்துவது பலரது வழக்கமாகிவிட்டது. மது அருந்தவில்லை என்றால் இந்த பண்டிகைகள் முழுமையடையாத உணர்வு மது பிரியர்களுக்கு ஏற்படுகிறது. 

ஒவ்வொரு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளின்போதும், டாஸ்மாக் மது விற்பனை விவரம், ஏதோ சாதனையை போல பகிரப்பட்டு கொண்டிருக்கிறது. அந்தவகையில், மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது.

இதையும் படிங்க - தேவர் தங்க கவசம் அதிமுகவிற்கே சொந்தம்..! தனி நபருக்கு இல்லை..! ஓபிஎஸ்க்கு எதிராக சீறிய செல்லூர் ராஜூ

கடந்த ஆண்டு தீபாவளியின்போது நவம்பர் 3 மற்றும் 4ம் தேதி ஆகிய 2 நாட்களில் ரூ.431.03 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி, 2 நாட்களில் ரூ.464.21 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

இந்நிலையில், டாஸ்மாக் மது விற்பனையை விமர்சித்து பாமக நிறுவனர் ராமதாஸ் டுவீட் செய்துள்ளார். இதுகுறித்த டுவீட் செய்துள்ள ராமதாஸ், தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளுக்கு முந்தைய நாளான நேற்று ஒரே நாளில் ரூ. 259 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது. தீப ஒளி நாளான இன்று ரூ.300 கோடிக்கும் கூடுதலாக மது விற்பனை செய்யப்படக்கூடும் என்று டாஸ்மாக் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு தீபஒளி திருநாளுக்கு முதல் நாளில் ரூ.205 கோடிக்கும், தீப ஒளி நாளில் ரூ. 225 கோடிக்கும் மது விற்பனையான நிலையில், அதை விட இந்த ஆண்டு அதிகமாக மது விற்பனையாகியிருக்கிறது. மது விற்பனை அதிகரித்திருப்பது எந்த வகையிலும் சாதனையல்ல.... அவமானம்.

இரு நாட்களில் மதுவுக்காக செலவிடப்பட்ட சுமார் ரூ.600 கோடி ஆக்கப்பூர்வமாக செலவிடப்பட்டிருந்தால், லட்சக்கணக்கான  ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும் கிடைத்திருக்கும். லட்சக்கணக்கான குடும்பங்களின் மகிழ்ச்சியை மது பறித்திருப்பது வேதனையானது.

இதையும் படிங்க - மடியில் கனமில்லலை..! ஆறுமுகசாமி ஆணைய குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன்- விஜயபாஸ்கர்

தீப ஒளி, பொங்கல் போன்ற திருவிழாக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டுமானால் அந்த காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.  அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி மது விலக்கை  நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios