Asianet News TamilAsianet News Tamil

எங்க அய்யா அப்போவே அப்படி... இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல! காலரைத் தூக்கி கெத்து காட்டும் பாமகவினர்!!

அமைச்சர் அதிகாரம் மட்டுமல்ல.... அதன் வசதிகள் கூட எனை நெருங்கக் கூடாது! என்ற தலைப்பில் பழைய செய்தி தான் - இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக என பதிவிட்டுள்ளார்.

PMK proved Dr ramadoss Previous story
Author
Chennai, First Published Jun 30, 2019, 3:29 PM IST

அமைச்சர் அதிகாரம் மட்டுமல்ல.... அதன் வசதிகள் கூட எனை நெருங்கக் கூடாது! என்ற தலைப்பில் பழைய செய்தி தான் - இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக என பதிவிட்டுள்ளார்.

ராமதாஸின் அந்த பதிவில்; அது 2003-ஆம் ஆண்டு என்று நினைவு... தில்லியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன். அங்குள்ள பணிகள் முடிவடைந்த பின்னர் அடுத்த நாள் கோவையில் பா.ம.க. நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்து கொள்ள வேண்டும். 

கோவைக்கு நேரடி விமானம் இல்லாத நிலையில், பெங்களூர் நகருக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து தொடர்வண்டி மூலம் பயணம் செய்ய திட்டமிட்டோம். அதன்படி தில்லியிலிருந்து பெங்களூர் சென்றோம்.

என்னுடன் அப்போதைய தொடர்வண்டித்துறை இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தியும் பயணம் செய்தார். பெங்களூர் வந்தடைந்த நாங்கள் அங்கிருந்து கோவைக்கு தொடர்வண்டியில் புறப்பட்டோம். ஏ.கே.மூர்த்தி தொடர்வண்டித்துறை இணையமைச்சர் என்பதால் அவருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய தனிப்பெட்டி ஒதுக்கப்பட்டிருந்தது. நான் எனக்கு ஏ.சி. இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்து இருந்தேன்.

PMK proved Dr ramadoss Previous story

பெங்களூர் தொடர்வண்டி நிலையத்தில் ஏ.கே.மூர்த்தியை வரவேற்று வழியனுப்பி வைக்க தொடர்வண்டித் துறை அதிகாரிகள் திரண்டு வந்திருந்தனர். தொடர்வண்டி புறப்படுவதற்கு சிறிது நேரம் முன்பு வரையிலும் தனது பெட்டிக்கு செல்லாத ஏ.கே.மூர்த்தி, ‘‘ என்னை அமைச்சராக்கி அழகு பார்த்தது நீங்கள் தான். அதனால் நீங்களும் என்னுடன் தனிப் பெட்டியில் பயணிக்க வேண்டும்’’ என்று மன்றாடினார்.

ஆனால், அதை ஏற்க நான் மறுத்து விட்டேன். ‘‘ தொடர்வண்டித்துறை இணையமைச்சர் என்ற முறையில் உனக்காக அந்த தனிப் பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த பதவியிலும் இல்லாத நான் அதில் பயணம் செய்வது முறையல்ல. எந்த அதிகார பதவியையும் வகிப்பதில்லை என நான் உறுதி ஏற்றுள்ளேன். அதிகாரப் பதவி மட்டுமல்ல.... அதனால் கிடைக்கும் வசதிகளையும் கூட நான் அனுபவிக்க மாட்டேன்’’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டு எனக்கான இரண்டாம் வகுப்பு இருக்கையில் பயணித்தேன்.

வேறு வழியின்றி என் தொண்டன் ஏ.கே. மூர்த்தி அமைச்சருக்கான தனிப்பெட்டியில் பயணித்தார். தனது மகனின் உயர்வை தாய் எப்படி ரசிப்பாளோ, அதே மகிழ்ச்சியுடன் என்னால் உயர்த்தி வைக்கப்பட்ட எனது தொண்டனின் பயணத்தை ரசித்தபடி நான் எனது பயணத்தைத் தொடர்ந்தேன். என பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

PMK proved Dr ramadoss Previous story

ராமதாஸின் இந்த பதிவைப் பார்த்த பாமகவினர், உண்மை தொண்டன் உயர்வைக் கண்டு உள்ளம் மகிழும் தலைவர் சமூக நீதி சமூக நீதி போராளி மருத்துவர் அய்யாவின் பெருந்தன்மை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படிப்பட்ட நினைவுகள் அரசியல் தலைவர்களுக்கு வர வேண்டும் பேருந்தில், அண்ணா தான் நம் முத்துக்கள் துடிப்பதை நான் தூர இருந்து பார்த்து ரசிக்க வேண்டும் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும். இவன் என் தம்பி என்பதை உலகம் அறிய வேண்டும் என்று பேரறிஞர் பெருந்தகை கூறியதை நினைவுக்கு வருகிறது. மகிழ்ச்சி இது போன்ற செய்திகளை அதிகமாக வெளியிட வேண்டும் அதை பார்த்தாவது தற்கால அரசியல் தலைவர்கள் திருந்த வேண்டும் என பெருமையாக சொல்கின்றனர். 

மேலும், உங்கள் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, உங்களோடு பயணித்தவர்களுக்கு தெரியும் உங்கள் பிடிவாதம், அரசியல் ஒழுக்கம் , பந்தா பகட்டு படோடாபமில்லாத எளிமை. அந்த வகையில் நாங்கள் நேரில்அறிந்த ஒன்றை நினைவு கூற வேண்டும், 1991 ஆண்டு சட்ட மன்ற தேர்தல் பிரசாரம் பண்ணிய சமயத்தில் பல கிராமங்களில் பிரசாரம் முடித்து மதிய உணவுக்கு ஆரணி வந்தபோது, கட்சி நிர்வாகிகள் அனைத்து வகையான அசைவ உணவுகள் ஏற்பாடு செய்திருந்த போதிலும், அதை நிர்வாகிகளை சாப்பிட சொல்லிவிட்டு தான் கொண்டு வந்த பழைய சோற்றை (கஞ்சி) தான் பயணித்த அம்பாசிடர் காரிலேயெ அமர்ந்து உண்டது கண்டு ஆச்சர்யபட்டனர் நிர்வாகிகள். இன்னும் பல என காலரைத் தூக்கி கெத்தாக சொல்கின்றனர் பாமக தொண்டர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios