விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் . திருமாவளவனுடன் பாமக தலைவர் ஜிகே மணி சிரித்துப் பேசி மகிழ்ச்சியாக உள்ள புகைப்படம் வெளியாகி பமக வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் "நமக்கான சேட்டிலைட் தொலைக்காட்சி" என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  அதில் அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  பாமக தலைவர் ஜிகே மணி,  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன்,  மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா,  மதிமுக துணைப் பொதுச்  செயலாளர் மல்லை சத்யா,  இந்திய குடியரசு கட்சி தலைவர் சேகு தமிழரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு  வாழ்த்து தெரிவித்தனர்.  இதில் விஷயம் என்னவென்றால்.  பரம எதிரி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சித் தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்து ஒருவரை ஒருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியாக பேசிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. பக்கத்தில் இருந்த மற்ற கட்சித் தலைவர்களே "அட பாருப்பா... மேடையில ரெண்டு கட்சியும் அப்படி மோதிக்குறாங்க,  இங்க இப்படி கொஞ்சிக்குறாங்க ஒன்னும் புரியலயே என்று ஆச்சரியப்படும் அளவிற்கு நடந்துள்ளது.

 

அதாவது பாமக தலைவர் ஜிகே மணி அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இருவரும் நேற்று சந்தித்துக் கொண்டபோது, மகிழ்ச்சியாக கைகொடுத்து பேசிக்கொண்டார்கள்.  அதற்கான  புகைப்படம் தற்போது வெளியாகி பாமக தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பாமகவுக்கு ஜென்ம எதிரி கட்சியான விடுதலை சிறுத்தைகள் பார்க்கப்படுகிறது.  எல்லா மேடைகளிலும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கும் அதன் தலைவர் திருமாவளவனுக்கு எதிராகவும் பாமக நிறுவனர் ராமதாஸ்,  மற்றும் அன்புமணி ஆகியோர் கடுமையாக விமர்சித்து பேசிவருகின்றனர்.   திருமாவளவனும் அதற்கு பதிலடி கொடுத்து பேசுவது வழக்கமாக இருந்துவருகிறது.  இந் நிலையில் ஜிகே மணி திருமா சந்திப்பு புகைப்படம் பாமகவினருக்கு  மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. 

பாமகவின் கோட்டை என கருதப்படும் வட மாவட்டத்தில் திருமாவளவன் பாமகவுக்கு டப் கொடுத்து எம்பியாகி இருக்கிறார். அது மேலும் பாமகவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகளின் மீதுள்ள கோபத்தில்தான் பாமக நேரடியாக திமுகவையே எதிர்த்துவருகிறது  என்ற பேச்சும் இருந்து வருகிறது.  எனவே  பாமகவை சமாதானம் செய்ய கூட்டணியிலிருந்து விடுதலை சிறுத்தைகளை வெளியேற்றும் அளவிற்கு திமுக யோசிப்பதாகவும் தகவல் பரவிவருகிறது.  யாரை ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்வேனே தவிர திருமாவளவனையும் விடுதலை சிறுத்தை கட்சியை  மட்டும் ஏற்றுக் கொள்ளவே முடியாது என மருத்துவர் ராமதாசும்,  அவரது மகன் அன்புமணி ராமதாசும்  பகிரங்கமாகப் பேசி வருகின்றனர். இந்நிலையில் பாமக தலைவரும் டாக்டர் ராமதாஸின் நம்பிக்கைக்குரியவருமான,  ஜி கே மணி அவர்கள் திருமாவளவனை சந்தித்து கைகுலுக்கி பேசியிருப்பது பாமகவை  அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் பாமக தலைவர் ஜிகே மணி அவர்கள் திருமாவளவனுடன் மகிழ்ச்சியாக பேசுவதை பாமகவினரால் ஜீரணிக்க முடியவில்லை. சமூக வலைதளங்களில் தங்களது கடுமையான எதிர்ப்பை அவர்கள் மறைமுகமான  தெரிவித்து வருகின்றனர். ஜிகே மணி  இதற்கான விளக்கத்தை கொடுத்தால் மட்டுமே கட்சியினரின் கோபத்தை தணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இல்லை என்றால்,  பாமக தாக்க தயாராக காத்திருக்கும் வன்னியர் அமைப்புகள் இதை தங்கள் அரசியலுக்கு பயன் படுத்திக் கொள்வார்கள் என்றும், அத்துடன்  வன்னிய மக்கள் பாமகவின் மீது வைத்துள்ள நம்பிக்கை இதன் மூலம் கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சத்தில் பாமக தலைமை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.