அன்புமணிக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும் வாங்க மாட்டோம்,  ஆனால் கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பாமக ஆதரிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் .  குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையிலும் நிறைவேறி  குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது .  அது சட்டமாவது  உறுதியாகியுள்ளது .  கூட்டணி கட்சிகளான அதிமுக , பிஜி ஜனதா தளம் ,  ஐக்கிய ஜனதா தளம் ,  ஆகிய எம்பிக்களின் ஆதரவுடனே  மசோதா நிறைவேறியுள்ளது . 

அதாவது  பாஜகவுடன் கூட்டணி வைக்கும் போது ,   கூட்டணியில் இருந்தபடியே மக்களின் உரிமைக்காக பாமக போராடும் என அப்போது பாமக நிறுவனர்  ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ்  ஆகியோர் தெரிவித்திருந்தனர்.   இந்நிலையில்  நாடே  குடியுரிமை சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில்  பாமக  அந்த சட்டத்தை வரவேற்றுள்ளது.  அதிமுக சார்பில்  எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் இச்சட்டத்தை நிறைவேற்ற வாக்களித்திருப்பது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்கள் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் ,  அன்புமணி ராமதாசுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தாலும் வாங்க மாட்டோம் .  அதேவேளையில் கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை  ஆதரித்து தான் ஆகவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் ஒன்பது பாமகவின் நிலைபாடு என்றும்,  அவர் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தது ஈழத் தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்றும் அவர்  தெரிவித்தார் . அன்புமணி ராமதாசுக்கு எப்படியாவது பாஜகவில் அமைச்சர் பதிவி பெற்றுவிட வேண்டும் என்று பாமக காய் நகர்த்தி வரும் நிலையில்,  பாஜக பாராமுகமாகவே இருந்து வருகிறது , இந்த நிலையில் பாமக நிறுவனத் தலைவர்  ராமதாஸ் , '' பதிவி கொடுத்தாலும் வாங்க மாட்டோம் '' என்று சொல்வது விரக்தியின் வெளிபாடாகவே தெரிகிறது...