Asianet News TamilAsianet News Tamil

அதிமுக தலைவர்களை அசரடித்த ராமதாஸ்... டாக்டர் ஐயாவின் தரமான கண்டு பிடிப்பு..!

’’இந்தத் தேர்தலுடன் திமுகவின் அத்தியாயம் முடிய போகிறது. முதலில் ஸ்டாலின் வாய்க்கு பூட்டுப் போட வேண்டும்'' என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

pmk Founder ramadoss election campagin  in dindugul
Author
Tamil Nadu, First Published Mar 29, 2019, 3:14 PM IST

’’இந்தத் தேர்தலுடன் திமுகவின் அத்தியாயம் முடிய போகிறது. முதலில் ஸ்டாலின் வாய்க்கு பூட்டுப் போட வேண்டும்'' என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 pmk Founder ramadoss election campagin  in dindugul

திண்டுக்கல் மக்களவை தொகுதியில் பாமக போட்டியிடுகிறது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,’’ திண்டுக்கல் தொகுதியில் பாமக நிற்குமோ என சிலர் நினைத்தார்கள். இன்றைக்கு நீங்கள் எல்லாம் வேறு மாதிரியாக பேசி இருக்கிறதை பார்க்கும்போது ஒரு லட்சம் இரண்டு லட்சம் இல்லை 3 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறோம் என்று சொன்னதைக் கேட்கவும் தான் இன்று இரவு நல்லபடியாக நான் தூங்கப் போகிறேன். pmk Founder ramadoss election campagin  in dindugul

இதை உடனே அன்புமணிக்கும், ஜி.கே.மணிக்கும் தெரியப்படுத்துவேன். இது மூலம் பாண்டிச்சேரி உள்பட ஏழு தொகுதிகளிலும் பாமக வெற்றி பெறும். அதோடு பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சி வெற்றிபெறும். அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எல்லாம் உண்மையாக உழைப்பவர்கள். அவர்களிடம் சூதுவாது எல்லாம் கிடையாது. ஆனால், மற்ற கூட்டணிக் கட்சிகள் மாலை போட்டு விட்டு கழுத்து அறுத்துவிடுவார்கள்.

pmk Founder ramadoss election campagin  in dindugul

முதன்முதலில் ஜெ.வுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றோம். அதுபோல் தற்போது மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து அதன் மூலம் இந்த மெகா கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். விவசாய குடும்பத்தில் பிறந்த ஜோதி முத்துவை வேட்பாளராக இறக்கியிருக்கிறோம். இந்த திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை. அப்படிப்பட்ட இந்த கோட்டையை யாரும் ஓட்டை போட முடியாது. அந்த அளவுக்கு கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள். அதில் பாமகவுக்கு மாங்கனி சின்னம் என்றாலும் அந்த மாங்கனியின் இரண்டு பக்கமுமே இலை இருக்கிறது என்று மக்களிடம் சொல்லுங்கள். நான் அதிமுகவில் கூட்டணி வைத்தைக் கண்டு ஸ்டாலின் முதன் முதலில் வசைபாட ஆரம்பித்துவிட்டார். pmk Founder ramadoss election campagin  in dindugul
 
அங்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இல்லை கலைஞருக்குப் பிறகு இனிமேல் அந்த கட்சி தேராது. தற்பொழுது அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இந்த அரசு மேல் கோபமாக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். உங்களுடைய கோரிக்கைகளையும், குறைகளையும் தேர்தல் முடிந்தவுடன் நானே முதல்வரிடமும், துணை முதல்வருடன் பேசி நிறைவேற்றிக் கொடுக்கிறேன். நேரு காலத்திலிருந்து ராகுல்காந்தி காலம் வரை வறுமையை ஒழிப்பதாக காங்கிரஸார் கூறுகின்றனர். ஆனால் வறுமையை ஒழித்தபாடு இல்லை. இப்போது குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கொடுப்போம் எனக் கூறுவது சாத்தியமில்லை. இந்தத் தேர்தலுடன் திமுகவின் அத்தியாயம் முடிய போகிறது. முதலில் ஸ்டாலின் வாய்க்கு பூட்டுப் போட வேண்டும்'' என்று கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios