தேர்தல் நேரத்தில் தவறான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை திசை திருப்பும் திமுகவை நம்பவேண்டாம் என பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து திருப்பத்தூர்  மாவட்டம் என தனி மாவட்டமாக அறிவித்த தமிழக  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் பாமக சார்பில் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.  அதில் கலந்துகொண்டு பேசிய  பாமக நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாஸ், தேர்தல் நேரம் வந்துவிட்டால்  இல்லாத பொல்லாத வாக்குறுதிகளை கூறி மக்களை திசை திருப்பு வேலையில் திமுக ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.

 

பொய் புரட்டுகளை கூறி, வாக்கு சேகரிக்கும் திமுகவை யாரும் நம்ப வேண்டாம் என்றார்.  திமுகவினரும் அதன் கட்சித் தலைவர் ஸ்டாலினும் பொய் மூட்டைக்களை அவிழ்த்துவிடுவதில் வல்லவர்கள் என்று கூறிய அவர், தேர்தல் நேரத்தில் திமுகாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.தொடர்ந்து பேசிய  ராமதாஸ், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள் என்று கூறினார்.அதற்கான அனைத்து முயற்ச்சிகளும் தமிழக அரசு எடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

விளையாட்டு மைதானம் இல்லாத தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.