மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் மேலும் சாதிக்க வாழ்த்துகள் என்று டாக்டர் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
கோவாவில்  50வது சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20 - 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். சுமார் 45 ஆண்டுகளாக இந்திய திரைப்படதுறைக்கு ரஜினி அளித்துள்ள பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது மத்திய அரசு அறிவித்துள்ளது. 
ரஜினிக்கு விருது அறிவிப்பை அடுத்து மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பல தரப்பினரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். ரஜினிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கோவாவில் இம்மாதம் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு கோல்டன் ஜூப்ளி விருது வழங்கப்பட இருப்பதில் மகிழ்ச்சி. திரைத்துறையில் மேலும் சாதிக்க வாழ்த்துகள்!” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தேர்தல் ஆலோசகர் கிஷோர் பிரசாந்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியதாக வெளியான தகவலையடுத்து, ரஜினியைக் கலாய்த்து ட்விட்டரில் டாக்டர் ராமதாஸ் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.