மனிதகுலம் என்பது ஒரு கடல்; அதில் சில துளிகள் அழுக்காக இருப்பதாலேயே, ஒட்டுமொத்த கடலும் அழுக்காகி விடாது என்று காந்தியடிகளின் பொன்மொழியைக் குறிப்பிட்டு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போட்ட ட்வீட்டில் யாரைக் குறிப்பிடுகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.


பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர். தன்னுடைய அறிக்கையை வெளியிடுவது மட்டுமல்லாமல், தினசரி நடக்கும் அரசியல் நிகழ்வுகளை கிண்டலடித்து ட்விட் செய்வது அவருடைய வாடிக்கை. சில நேரங்களில் உலக தலைவர் முதல் புகழ் பெற்ற தலைவர்களின் மேற்கோள்களை ட்விட்டரில் குறிப்பிடுவார். அதில் பல பேரம் அந்தச் சூழ்நிலைக்கேற்ற அரசியல் விஷயங்கள் பொதிந்திருக்கும். சில நேரங்களில் அவர் போடும் ட்வீட், தலையைப் பிய்த்துக்கொள்ளும் அளவுக்கு யோசிக்கவைத்துவிடும்.


இந்நிலையில் இன்று காலை காந்தியடிகளின் பொன்மொழி ஒன்றை ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டார். அதில், “மனிதகுலம் மீதான நம்பிக்கையை நீங்கள் இழக்கக்கூடாது. மனிதகுலம் என்பது ஒரு கடல்; அதில் சில துளிகள் அழுக்காக இருப்பதாலேயே, ஒட்டுமொத்த கடலும் அழுக்காகி விடாது - மகாத்மா காந்தியடிகள்” என ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார்.


இதில் சில துளிகள் அழுக்கு என்று ராமதாஸ் யாரை குறிப்பிடுகிறார் என்றுதான் தெரியவில்லை. அண்மைக் காலமாக திமுகவுக்கு எதிராக ராமதாஸ் ட்வீட் செய்துவருகிறார். இரு தினங்களுக்கு முன்பு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தெரிந்தது மூன்று விஷயங்கள்தான் என்று அவர் செய்த ட்வீட், சமூக ஊடகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.