அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் அதிருப்தியடைந்த பாமக மாநில துணைத் தலைவரரும் நடிகருமான ரஞ்சித் அமமுகவில் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் இணைந்தார்.

 

அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்ததால் விரக்தியான பாமக நிர்வாகிகள் விரக்தி அடைந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக மகளிரணி தலைவர் ராஜேஸ்வரி ப்ரியா பாமகவை விட்டு வெளியேறினார். நேற்று பாமக தமிழக துணை தலைவரான நடிகர் ரஞ்சித் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். இந்நிலையில் புதுச்சேரியில், அமமுக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். 

இதுகுறித்து ரஞ்சித் கூறுகையில், பாமகவை விட்டு நான் விலகியதுப் நல்லது. இளைஞா்கள் எதிர்பார்க்கும் நல்ல தலைவா், நல்ல தலைமையை கருத்தில் கொண்டு அமமுகவில் இணைந்தேன். டி.டி.வி.தினகரனிடம் தைரியம், தன்னம்பிக்கை கொள்கை, விட்டுக் கொடுக்கும் மனபாவம் எல்லாம் இருக்கிறது. அவரது அனுகுமுறை எனக்கு மிகவும் பிடிக்கும். சூழ்நிலைக்காக எவன் காலையும் பிடிக்காமல் தனித்துவத்தோடு அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

வன்னியர் சமுதாய மக்கள் மிகவும் நல்லவர்கள். அவன்னியர் சமுதாய மக்களின் வாக்குகள் அமமுகவுக்கு அதிகமாக கிடைக்கும் ஆகையால் வட மாவட்டங்களில் அமமுக பெரும் வெற்றி பெறும்’’ என அவர் தெரிவித்தார். நடிகர் ரஞ்சித் பாமகவில் இணைவதற்கு முன் அதிமுகவில் இருந்தவர்.