பாமக தமிழ் ஊடக பிரிவின் தலைவராக இருந்து வந்த சோழன் குமார் வாண்டையார் இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது பாஜக எம்எல்ஏக்களை தமிழக சட்டப்பேரவைக்குள் அனுப்ப வேண்டும் என்று எல்.முருகன் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பாஜகவில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். சமீபத்தில் திமுக முன்னால் எம்.பி கே.பி.ராமலிங்கம்  மற்றும் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் உள்ளிட்டோர் சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், பாமக தமிழ் ஊடக பிரிவின் தலைவராக இருந்து பின்னர் அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, சோழன் குமார் வாண்டையார் பாஜகவில் இணைந்துள்ளார். அதேபோல், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளர் அருணாச்சலமும் பாஜகவில் இணைந்தார். இதனால், தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.