Asianet News TamilAsianet News Tamil

அன்புமணியின் பிரஸ்மீட் சீசன் -2... தேதி ரெடி, நீங்க ரெடியா..?

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பி.ஜே.பி.யுடன் பா.ம.க. கைகோர்த்து போட்டியிட்டது. அதேபோல் உள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்: அன்புமணி ராமதாஸ் 

PMK Anbumani prees meet
Author
Tamil Nadu, First Published May 17, 2019, 2:36 PM IST

* கடந்த தேர்தலில் மோடிக்கு மன்மோகன் சிங்கும், சோனியாவும் போட்டியாக இருந்தனர். ஆனால் இந்த தேர்தலில், மோடிக்கு போட்டியே இல்லை: ராஜ்நாத் சிங். (க்கும், சிங்கண்ணே உள்ளுக்குள்ளேயே இம்சை எதிரி இருக்குறப்ப, வெளில இருந்து வேற ஒரு எதிரியை எதிர்பார்க்குறீங்களோ? ரேடாரு, எஸ்.எல்.ஆருன்னு ரகம் ரகமா மோடிக்கு உள்ளே இருக்கிற எதிரி எடுத்து வுடுறது போதாதா பாஸு?)

* கர்நாடகாவின் அடுத்த முதல்வர் என்று கட்சியினரும், ஆதரவாளர்களும் என்னைப் பற்றி கூறுகின்றனர். இது அவர்கள் என் மீது வைத்துள்ள அன்பை காட்டுகிறது:    சித்தராமையா (ஆஹா சைத்தான் கோட்டைய நோக்கி சைக்கிளை மிதிக்க ஆரம்பிச்சிடுச்சு, சூதானமா இருந்துக்கடா குமாரசாமி. எதுக்கும் டாடி கவுடாவை கூட்டியாந்து கூடவே ஒக்கார வெச்சுக்க.)

* நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பி.ஜே.பி.யுடன் பா.ம.க. கைகோர்த்து போட்டியிட்டது. அதேபோல் உள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்: அன்புமணி ராமதாஸ்  (அன்புணா, அப்ப பிரஸ்மீட் சீசன் -2 இருக்குது, தைலாபுர விருந்து சீசன் -2 இருக்குதுன்னு நீங்க சொல்லுங்க. அதேமாதிரி மீம்ஸுல உங்களை வெச்சு செய்யு செய்யுன்னு செய்யுற திருவிழா சீசன் - 2 இருக்குதுன்னு நாங்க சொல்றோம்.)

* தனது கூட்டணி தோல்வியடைவதால் எல்லோருக்கும்  தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்: பிரேமலதா. (ஒரே நேரத்துல எல்லாருக்கும் ஸ்டாலின் தூது அனுப்புறதை எப்படிக்கா துல்லியமா கண்டுபிடிச்சீங்க? எல்லம்  அனுபவம் தந்த சூட்சமம்தானேக்கா. ஆனா ஒண்ணு, அந்த விஷயத்துல உங்க திறமையை யாரும் அடிச்சுக்க முடியாதுங்கக்கோவ்!)

* மோடிக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை வீசி வருகிறது. இந்த சூழலில் ஒருமித்த கருத்துடைய தலைவர்கள் சந்திப்பது இயல்பானது. இதைப் போய் கூட்டணி அப்படியிப்படி என்று அபத்தமாய் பேசக்கூடாது: திருநாவுக்கரசர். (இப்படியெல்லாம் பேசித்தான் ஸ்டாலினை தாஜா பண்ண வேண்டியிருக்குது. ஒருவேளை காங்கிரஸ் கூட்டணி ஜெயிச்சு, ஆட்சிக்கு அமைச்சால், மந்திரிசபையில துண்டை போட்டு வைக்க ஸ்டாலினின் தயவும் வேணும்ல! இல்லையா அரசரண்ணே? ஆனா அதுக்காக சந்திரசேகரராவைப் போய் ஸ்டாலினோடு ஒருமித்த கருத்துடையை தலைவர்னு விட்டீங்க பாருங்க ஒரு ரீலு!....)

Follow Us:
Download App:
  • android
  • ios