Asianet News TamilAsianet News Tamil

மாறி மாறி கூட்டணி வைத்ததால் தொடரும் தோல்விகள்... பாமகவின் அதிரவைக்கும் பகீர் பின்னணி..!

சட்டமன்ற தேர்தல் என்றால் ஒருவருடனும், மக்களவை தேர்தல் வேறொருவருடனும் மாற்றி மாற்றி கூட்டணி என்பதை கொள்கையாகவே கொண்டுள்ள பாமக தொடர்ச்சியாக படுதோல்வியை சந்தித்து வருகிறது. 

PMK Allience... background shocking
Author
Tamil Nadu, First Published Feb 20, 2019, 10:34 AM IST

சட்டமன்ற தேர்தல் என்றால் ஒருவருடனும், மக்களவை தேர்தல் வேறொருவருடனும் மாற்றி மாற்றி கூட்டணி என்பதை கொள்கையாகவே கொண்டுள்ள பாமக தொடர்ச்சியாக படுதோல்வியை சந்தித்து வருகிறது. 

அதிமுகவை கடுமையாக எதிர்த்து வந்த பாமக, 1998-ம் ஆண்டு அதே கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது அதிமுக கூட்டணியில் பாமக, மதிமுக, பாஜக, சுப்பிரமணியசுவாமியின் ஜனதா, வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாமகவுக்கு தர்மபுரி, சிதம்பரம், வேலூர், வந்தவாசி, மயிலாடுதுறை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 4 தொகுதிகளில் பாமக வெற்றி பெற்றது. மயிலாடுதுறையில் தோல்வியை சந்தித்தது. PMK Allience... background shocking

அதேபோல, 2009ம் ஆண்டு மீண்டும் அதிமுகவுடன் மக்களவை தேர்தலில் பாமக போட்டியிட்டது. அந்தக் கூட்டணியில் மதிமுக, 2 கம்யூனிஸ்ட்களும் இடம்பெற்றிருந்தனர். அதில் பாமகவுக்கு தர்மபுரி, சிதம்பரம், அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, புதுவை ஆகிய 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 7 தொகுதியிலும் பாமக படுதோல்வி அடைந்து ஒயிட் வாஷ் செய்யப்பட்டது. இதையடுத்து கூட்டணி பங்கீடுபடி ஒரு ராஜ்யசபா சீட்டை தருவதாக ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால் பாமவின் படுதோல்வியால் கடும் கோபத்தில் இருந்த ஜெயலலிதா ராஜ்யசபா சீட் தர மறுத்துவிட்டார்.  PMK Allience... background shocking

அதேநேரத்தில், திமுகவுடன் 1999-ம் ஆண்டு பாமக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது அக்கட்சிக்கு தர்மபுரி, சிதம்பரம், வேலூர், வந்தவாசி, மயிலாடுதுறை, ராசிபுரம், செங்கல்பட்டு, புதுவை ஆகிய 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், 5 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமகவுக்கு தர்மபுரி, சிதம்பரம், அரக்கோணம், செங்கல்பட்டு, வந்தவாசி, புதுவை ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், 6 தொகுதியிலும் அக்கட்சி வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்டதை விட திமுக கூட்டணியில்தான் பாமக போட்டியிட்ட இடங்களில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. PMK Allience... background shocking

இவற்றையெல்லாம் பார்க்கும் போது பாஜக மற்றும் அதிமுக மீது மக்கள் ஏற்கனவே அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இப்போது ஒரு பகீர் ஸ்டேட்மெண்டை தட்டியுள்ளார். அதில் ‘காடுவெட்டி குருவின் மரணம் தொடர்பாக நான் நிறைய தகவல்களை சேர்த்து வைத்துள்ளேன். கூடிய விரைவில் இந்த உண்மைகளை வெளியிடுவேன். அப்போது சிலரின் முகச்சாயம் வெளுக்கும்.’ என்று  கூறியுள்ளது பாமகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஆக இந்தத் தேர்தலிலும் பாமகவுக்கு இறங்குமுகமாகவே இருக்கும் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios