Asianet News TamilAsianet News Tamil

PM Modi : மாறுங்கள் இல்லையேல் மாற்றத்துக்குத் தயாராகுங்கள்… பாஜக எம்.பி.க்களுக்கு எச்சரிக்கை விடுத்த மோடி!!

தாங்களாகவே மாறுங்கள், இல்லையேல், காலப்போக்கில் நடக்கும் மாற்றத்துக்குத் தயாராகுங்கள் என்று நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

pm modi warns bjp mps
Author
Delhi, First Published Dec 7, 2021, 5:05 PM IST

தாங்களாகவே மாறுங்கள், இல்லையேல், காலப்போக்கில் நடக்கும் மாற்றத்துக்குத் தயாராகுங்கள் என்று நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 23 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் 29 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தொடக்க நாளில் வேளாண் சட்டத்தை திரும்பப்பெறும் மசோதா இரு அவையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதே போல மேலும் பல மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. வேளாண் சட்டத்தை திரும்பப்பெறும் மசோதா விவாதமின்றி நிறைவேற்றப்பட்டதால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மேலும் 12 மேல்சபை எம்.பி.க்கள் சஸ்பெண்டை ரத்து செய்யக்கோரியும் எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி வருகின்றன. நாடாளுமன்ற வளாகத்திலும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாகாலாந்து பிரச்சனையை நேற்று கிளப்பினர்.

pm modi warns bjp mps

இந்த நிலையில் பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்களின் வருகைப்பதிவு குறைவாக இருக்கும் விவகாரம் குறித்து எச்சரித்த பிரதமர் மோடி, உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளுங்கள், இல்லையேல் காலப்போக்கில் நடக்கும் மாற்றத்துக்குத் தயாராகுங்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த கூட்டம் குறித்து தகவல்களை வெளியிட்ட நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, முதல் முறையாக, இந்தக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், அவரவர் தொகுதிகளில் விளையாட்டு போட்டிகளை நடத்துமாறு மோடி வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். வருகைப் பதிவு குறித்த விவகாரம் பற்றி பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரங்களில், அனைத்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தவறாது பங்கேற்க வேண்டும். குழந்தைகளிடம் ஒரு செயலை செய்ய வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினால், அவர்கள் கூட அந்தச் செயலை மீண்டும் செய்வதில்லை என்று குறிப்பிட்டார்.

pm modi warns bjp mps

மேலும், நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்கள் தாங்களாகவே மாறுங்கள், இல்லையேல், காலப்போக்கில் நடக்கும் மாற்றத்துக்குத் தயாராகுங்கள் என்றும் பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 5 மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் வருவதால் பாஜக எம்பிக்கள் கட்சிக் கூட்டங்கள், நாடாளுமன்றக் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று எச்சரிக்கை கலந்த கண்டிப்புடன் பிரதமர் மோடி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர்கள் ஜெயசங்கர், பியூஷ் கோயல், பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். இதனிடையே நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்களின் வருகைப் பதிவு மோசமாக இருப்பது குறித்து ஏற்கனவே பல முறை மோடி குறிப்பிட்டுப் பேசியுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios