நாடாளுமன்ற மக்களவைக்கு  ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்க உள்ளது. தேர்தலுக்கு பின் வெளியான கருத்து கணிப்புகள் அனைத்தும் 'பிரதமர் மோடி மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பார்' என தெரிவித்துள்ளன.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில்  மத்திய அமைச்சர்களை பிரதமர் சந்தித்து பேசினார். இதில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அமைச்சர்களும் பங்கேற்றனர்.

அப்போது பேசிய பிரதமர், நான் பல தேர்தல்களை பார்த்துள்ளேன். ஆனால் இந்த தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்தத என குறிப்பிட்டார்.
இந்த மக்களவைத் தேர்தலுக்காக தான் மேற்கொண்ட பிரசாரம் புனித யாத்திரை மேற்கொண்டது போல் இருந்தது என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னுடன் இணைந்து பணியாற்றிய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்  என்றும் பேசினார்.