ஊழல்வாதிகள் அரசின் நடவடிக்கைக்கு பயந்து ஓடி ஒளிந்து வருகின்றனர் என ப.சிதம்பரம்  கைது செய்யப்பட்டிருப்பது குறித்து   பிரதமர் மோடி  பிரான்ஸ் நாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றி இருக்கிறார். 

ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இந்திய பிரதமர் மோடி, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு  பயணம் மேற்கொண்டுள்ளார், முன்னதாக  நேற்று பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை  சந்தித்த அவர் இருநாட்டு உறவுகள் குறித்து பேசினார். இந்நிலையில் இந்திய வம்சாவளியினரால் பாரிஸில் உள்ள யுனஸ்கோ தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  பிரான்ஸ் வாழ் இந்தியர்கள் மத்தியில்  மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்.  இப்போது நான் கால்பந்து தேசத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கிறேன், கால்பந்து விளையாட்டில்  கோல் அடிப்பது  எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன், அப்படித்தான் நாங்களும் இந்தியாவிற்காக  பல கோல்களை நிர்ணயித்து இருக்கிறோம். ஒவ்வொரு கோலாக அடித்து வருகிறோம். இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல மக்கள் எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளனர். நாங்கள் எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளால் நாடு வேகமாக வளர்ந்து வருகிறது. தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.   ப. சிதம்பரம் முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் பேசிய மோடி நாட்டில் ஊழல்வாதிகளும், முறைகேடு செய்தவர்களும் இப்போது ஓடி ஒளிந்து வருகின்றனர் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

 நாட்டின் வளர்ச்சியில்  இதற்கு முன் இருந்த அரசு எங்களைப்போல் செயல்பட்டதே இல்லை என்ற அவர்,  இனி  யாரும் இப்படி செய்யப்போவதில்லை  என்று நாட்டு மக்கள் சொல்லும் அளவிற்கு நாட்டிற்கும் நாட்டு மக்களின் வளர்ச்சிக்காகவும் கடுமையாக உழைத்து வருகிறோம்.   கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த  பிரச்சனையில் கடந்த 75 நாட்களில் அதிரடியாக முடிவுகளை எடுத்துள்ளோம், தீவிரவாதத்தை இந்தியா இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது இவ்வாறு மோடி போசினார்.