Asianet News Tamil

சிறையில் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை... கதறும் சசி, ஆக்ரோஷ இளவரசி, துள்ளும் தினகரன், மன்னார்குடி வகையறாவை வெச்சு செய்யும் மோடி..!

அந்த நாவலில் இப்படியொரு திடீர் ட்விஸ்ட்டை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அடித்து தூக்கி அந்தர் பண்ணிவிட்டது டெல்லி லாபி. மன்னார்குடி வகையறாவின் இளவரசரான விவேக் ஜெயராமனை வகையாக ‘லாக்’ செய்து சசி அண்ட்கோவுக்கு அண்டா அண்டாவாக எனிமா கொடுத்திருக்கிறது. 

PM Modi master plan
Author
Tamil Nadu, First Published Apr 16, 2019, 5:53 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

அந்த நாவலில் இப்படியொரு திடீர் ட்விஸ்ட்டை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அடித்து தூக்கி அந்தர் பண்ணிவிட்டது டெல்லி லாபி. மன்னார்குடி வகையறாவின் இளவரசரான விவேக் ஜெயராமனை வகையாக ‘லாக்’ செய்து சசி அண்ட்கோவுக்கு அண்டா அண்டாவாக எனிமா கொடுத்திருக்கிறது. 

என்ன விவகாரம்?.... பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மூவரும் அடைபட்டுள்ளனர். இவர்கள் சிறையில் சொகுசாக வாழ்வதற்காக சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் தரப்பட்டது! என்று சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பாக டி.ஐ.ஜி. ரூபா ஒரு புகாரை பற்ற வைத்தார். அணுகுண்டு போல் வெடித்து சிதறிய இந்த பஞ்சாயத்தின் வழக்கு விசாரணை இன்று வரை நடந்து கொண்டுள்ளது.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கின் விசாரணையில் குதித்தது. வெளியிலிருந்து பணத்தை கொண்டு வந்து சசி அண்ட்கோவுக்காக சிறை அதிகாரிகளிடம் கொடுத்தவர்கள்! எனும் பட்டியலில் சசியின் அண்ணி இளவரசியின் மகன் விவேக்கின் பெயரைம் வைத்துள்ளார்கள். இந்த விவேக் யாரென்றால் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவால் பாசத்தை கொட்டி வளர்க்கப்பட்ட ஆண் பிள்ளை. ஜெயலலிதாவிடம் உரிமையாக பாசம் காட்டவும், சண்டை போடவும், நியாய அநியாயங்களை சொல்லிக் காட்டவும் உரிமை பெற்ற ஒரே ஆண்.

 

 ஜெயலலிதாவால் ‘பாய், பிரின்ஸ்’ என்றெல்லாம் பாசங்காட்டப்பட்டவர்தான் இந்த விவேக். இவரைத்தான் அந்த லிஸ்டில் வைத்திருந்தது கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை. இதற்கான ஆர்டர், மேலிருந்து வந்தது! என்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் விவேக்கை ‘சாதாரண ஒரு என்கொயரி இருக்குது. வந்துட்டு போங்க!’ என்று  பெங்களூரு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. காலையிலேயே சென்றவரை பல மணிநேரங்கள் காத்திருக்க வைத்துவிட்டு, மாலையில் ஃபார்மலாக சில கேள்விகள் கேட்டு ‘நாளைக்கு வாங்க’ என்று அனுப்பியுள்ளனர். 

மறுநாளும் இதையே செய்துவிட்டு ‘உங்க கையில எந்தளவுக்கு பணம் இருக்குது, நீங்க யார் கூட தொடர்புல இருக்கீங்கன்னு எல்லாமே தெரியும். அதனால இந்த விசாரணையை பத்தி யார்ட்டயும் பேச வேண்டாம், மீடியா பக்கம் போகக்கூடாது. உங்க மொபைல் போன் உரையாடலை டேப் பண்றோம்.’ என்று தில்லாக சொல்லியடித்து அனுப்பியுள்ளனர். கிட்டத்தட்ட ஐந்து, ஆறு நாட்களாக இப்படி பெங்களூருவிலேயே  விவேக்கை உட்கார வைத்துள்ளார்கள். எதற்குமே அவ்வளவு எளிதில் அசராத விவேக், கிட்டத்தட்ட இந்த ஹவுஸ் அரெஸ்ட் பிரச்னையால் ஏகத்துக்கும் தளர்ந்துவிட்டாராம்.

 

ஏன் இந்த அதிரடி? என்று கேட்டால்....”சசி குடும்பத்தின் ஒட்டுமொத்த வருமானத்தையும் நிர்வகிப்பது விவேக்தான். தினகரனே இவரிடமிருந்துதான் பணம் வாங்கி செலவு செய்கிறார். விவேக்கை லாக் செய்துவிட்டால், தேர்தல் செலவு, ஓட்டுக்கு பட்டுவாடா செய்வதற்கெல்லாம் நிதி இல்லாமல் தினகரன் திண்டாடுவார். தேர்தல் வேலையை முழுமையாக பண்ண முடியாமல் போகும். பணம் தராததால் அவர் கட்சியினரும் உழைக்கமாட்டார்கள், ஓட்டுக்களும் விழாது. அ.ம.மு.க. கடுமையாய் தோற்கும். 

இல்லையென்றால் பல இடங்களில் அ.தி.மு.க. மற்றும் பி.ஜே.பி.யின் வெற்றியை பாதிப்பதோடு, சில இடங்களில் தினகரன் கட்சி ஜெயித்தாலும் ஆச்சரியமில்லை. எனவே அதை உடைத்து நொறுக்கத்தான் விவேக் லாக் செய்யப்பட்டுள்ளார்.” என்கிறார்கள். விவேக் இப்படி லாக் செய்யப்பட்டிருப்பதை சசியால் தாங்கிக்க முடியவில்லை. காரணம், அவ்வளவு பாசம் அவர் மீது. 

இதனால் சிறையில் கண்ணீர்விட்டு கதறிவிட்டாராம், விவேக்கின் அம்மா இளவரசியோ ‘இந்த நாசமா போன அரசியலால்தான் என் குடும்பமே நிம்மதியில்லாம போச்சு. பணமிருந்து என்ன பண்ண? பசிக்கு நிம்மதியா சாப்பிட முடியுதா?’ என்று ஆக்ரோஷப்பட்டுவிட்டாராம். விவேக்கின் அரெஸ்டினால் தினகரனுக்கு பெரிய வருத்தமில்லை, காரணம் ரெண்டு பேருக்கும் அவ்வளவாக ஒத்துப் போகாது. ஆனால் தங்கள் குடும்பத்தை இப்படி சர்வாதிகாரம் செய்து முடக்குவதை அவரால் தாங்க முடியவில்லை. அதனால் ‘தேர்தல் முடியட்டும், ஆட்சி மாறும் அப்புறம் வெச்சுக்கிறேன்’ என்று குதித்திருக்கிறாராம். ஆடிய ஆட்டமென்ன?!...........

Follow Us:
Download App:
  • android
  • ios