கடந்த முறை வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடி இந்த முறையும் இரு தொகுதிகளில் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளார். 

அதன்படி ஒடிஸா மாநிலத்தில் புரி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி களமிறங்கத் திட்டமிட்டுள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா தொகுதியிலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டு, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதனையடுத்து வதோதரா தொகுதியில் ராஜிநாமா செய்தார்.

இப்போது மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. காரணம், புனிதமான காசி விஸ்வநாதர் வாரணாசியில் இருப்பதே. இந்த முறையும் இரு தொகுதிகளில் களமிறங்கும் அவர், வதோதரா தொகுதியை விட்டுவிட்டு ஜெகந்நாதர் கோயிலைக் கொண்ட புனித ஸ்தலமான புரி தொகுதியில் களமிறங்க திட்டமிட்டுள்ளார்.

 

வாரணாசி தொகுதியில் போட்டியிட மோடி முடிவெடுத்துள்ளது உறுதியாகி உள்ள நிலையில், அவர் போட்டியிடும் இரண்டாவது தொகுதியாக புரியை டிக் அடித்துள்ளனர். இரு தொகுதிகளிலும் மோடி வெற்றி பெற்றால் புரி தொகுதியை அவர் ராஜினாமா செய்வார் எனக் கூறப்படுகிறது.