Asianet News TamilAsianet News Tamil

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடிய பேசவிடுங்கய்யா... அவையை அலறவிட்ட துரை முருகன்.. ஆடிப்போன காங்கிரஸ்.

அப்போது தொடர்ந்து பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது,  நான் முதல்வராக இருந்தபோதுதான் நீட் தேர்வு வந்தது என்ற அவதூறு செய்தி தொடர்ச்சியாக வெளியில்  பரப்பப்படுகிறது. அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. நீட் என்ற வார்த்தை வருவதற்கு யார் காரணம் அது எப்போது வந்தது என்பதை யாரும் மறக்க முடியாது என்றார். 

Please allow  Opposition leadr to speak " .. Durai Murugan angry..  .. Congress mla's shocking.
Author
Chennai, First Published Feb 9, 2022, 12:42 PM IST

நீட் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு அவையில் இருந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் இடையூறு செய்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை  பேச விடுங்கய்யா என அவை முன்னவர் துரை முருகன் ஆவேசம் தெரிவித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அளிக்க முயன்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மருத்துவ கல்லூரி  மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டு அது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 143 நாட்கள் அந்த மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திய நிலையில் பிப்ரவிர் 1 ஆம் தேதி நீட் விளக்கு சட்ட முன்வடிவை, மறுபரிசீலனை செய்யும்படி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்தார் ஆளுநர். இது தமிழக அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Please allow  Opposition leadr to speak " .. Durai Murugan angry..  .. Congress mla's shocking.

நீட் மசோதா திருப்பி அனுப்புவதற்கு ஆளுநர் கூறியுள்ள காரணத்தை ஆளுங்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் ஒரு முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்புவது என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று சட்டமன்றம் கூடியது. அதில் கவர்னர் அனுப்பிய கடிதம் மற்றும் நீட் விலக்கு சட்ட முன்வடிவு குறித்து சட்டசபை கட்சித் தலைவர்கள், எம்எல்ஏக்கள் உரையாற்றினர். அப்போது கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட  நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது, அதற்காக அவர் கூறிய கருத்துக்களும் ஏற்புடையது இல்லை என அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். அப்போது சட்டமன்ற கூட்டத்திலிருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதற்கு முன்பாக பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் எழுந்து பேச வாய்ப்பு கேட்டார். ஆனால் சபாநாயகர் அப்பாவு மறுத்துவிட்டார், ஆனால் நயினார் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக அவருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் திமுகவை விமர்சித்துப் பேச ஆரம்பித்தார். உடனே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு,  வெளியேறுவது என்றால் வெளியேறி விடுங்கள் அதற்கு இவ்வளவு சுற்றி வளைக்க தேவையில்லை என கூறினார். பின்னர் பாஜக உறுப்பினர்கள் வெளியேறினர்.

Please allow  Opposition leadr to speak " .. Durai Murugan angry..  .. Congress mla's shocking.

 அதன் பிறகு அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர் பேசினார். அதாவது அரசு பள்ளி மாணவர்கள் நலனுக்காக 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அதிமுக அரசு செயல்படுத்தியது. நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது, 2005ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு வேண்டாம் என்ற சட்டத்தை கொண்டு வந்ததே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான். நீட் தேர்வை எதிர்ப்பதில் எப்போதும் அதிமுக உறுதியாக உள்ளது. நீட் தேர்வு என்ற வார்த்தை காங்கிரஸ் ஆட்சியில் தான் வந்தது என அவர் கூறினார். இதனால் பேரவையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய விஜயபாஸ்கர் நீட் தேர்வுக்கு முன்பு நுழைவுத் தேர்வு என்பது 1884 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்தது. 2005 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று சட்டம் கொண்டு வந்தார் என பேசினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் மா.சுப்ரமணியின், அதற்கு ஆதாரம் இல்லை, நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் 2006 சட்டமியற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றார் என பதிலளித்தார்.

Please allow  Opposition leadr to speak " .. Durai Murugan angry..  .. Congress mla's shocking.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதற்கு ஆதாரம் உள்ளது, 2005 ஜூன் 19 அரசாணை போடப்பட்டது, இதை எதிர்த்து பிரியதர்ஷினி என்ற மாணவி வழக்கு தொடுத்தார், நீதிமன்றம் அதை ரத்து செய்தது. நீட் தேர்வு என்ற வார்த்தையே யாருக்கும் தெரியாமல் இருந்தபோது கடந்த 2010 டிசம்பர் 27ஆம் தேதி காங்கிரஸ் ஆட்சியின்போது முதன்முதலில் நீட் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு என்பது வந்தது என்றார். அவரின் இந்த பேச்சுக்கு அவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். செல்வப்பெருந்தகை எழுந்து பேச வாய்ப்பு கேட்க பேரவைத்தலைவர் அப்பாவு மறுத்தார்.

அப்போது எழுந்து பேச ஆரம்பித்த அவை முன்னவர் துரைமுருகன் தமிழ்நாட்டுக்கு நீட் தேவையில்லை என்பதை வலியுறுத்துவதற்காக தான் மீண்டுமொருமுறை அத்தனை பேரும் ஒன்று கூடி தீர்மானத்தை நிறைவேற்றும் வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் என அனைவரும் வந்து அமர்ந்துள்ளனர் இந்த நிலையில் மீண்டும் மீண்டும் நீட் யாரால் வந்தது, எப்படி வந்தது என பழைய கதைகளை பேசினால் மாறிமாறி விவாதம்  வந்து கொண்டுதான் இருக்கும் என்றார் எனவே நீட் விலக்கு குறித்து பேசி முடியுங்கள் என கோரிக்கை வைத்தார்.   

Please allow  Opposition leadr to speak " .. Durai Murugan angry..  .. Congress mla's shocking.

அப்போது தொடர்ந்து பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது,  நான் முதல்வராக இருந்தபோதுதான் நீட் தேர்வு வந்தது என்ற அவதூறு செய்தி தொடர்ச்சியாக வெளியில்  பரப்பப்படுகிறது. அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. நீட் என்ற வார்த்தை வருவதற்கு யார் காரணம் அது எப்போது வந்தது என்பதை யாரும் மறக்க முடியாது என்றார். அதை வலியுறுத்தும் வகையில்தான் விஜயபாஸ்கர் பேசினார் என்றால், அப்போது காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்கு பதல் அளிக்கும் விதமாக பேச வாய்ப்பு கேட்டவண்ணம் இருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்கு இடைஇடையே குறிக்கிட்டார். சபாநாகரும் தொடர்ந்து செல்வப் பெருந்தகையை அனுமதிக்க மறுத்து அவரை அமரும் படி கூறினார், ஆனால் செல்வப் பெருந்தகை அதை கேட்டவில்லை.

Please allow  Opposition leadr to speak " .. Durai Murugan angry..  .. Congress mla's shocking.

அப்போது ஆவேசமாக எழுந்த துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் அவையில் பேசிக்கொண்டிருக்கிறார், அதற்கு மதிப்பளிக்கும் வகையில் சிறிது நேரம் அமைதியாக இருங்கள், இந்த பிரச்சினைக்கு சுமூக முடிவு காணும் வகையில்தான் அவரது பேச்சுக்கள் இருக்கிறது, எதை வேண்டுமானாலும் பேசுங்கள் எதிர்கட்சித் தலைவர் பேசி முடித்த பிறகு பேசுங்கள், ஒரு எதிர்க்கட்சி தலைவர் பேசிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி குறுக்கிடுவது சரி அல்ல என எச்சரித்தார். இது அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவும் அனுசரனையாகவும் அதே நேரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு அட்வைஸ் செய்யும் வகையில் அவை முன்னவர்துரை முருகன் பேசிய விடியே சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 


 

Follow Us:
Download App:
  • android
  • ios