Plan to meet Sasikala Thanga Thamilselvan

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை வரும் 20 ஆம் தேதி டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் சந்திக்க உள்ளதாக எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம் குடகில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் பதவியில் இருந்து தாமாக விலக வேண்டும் என்று கூறினார்.

வரும் 20 ஆம் தேதி, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

கர்நாடகாவின் குடகில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் டிடிவி தினகரனுடன் சசிகலாவை சந்திக்க உள்ளோம்.

சசிகலா, டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நீக்கிய பிறகு, சசிகலாவை டிடிவி தினகரன் முதன் முறையாக சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.