he was silent for 30 days. Manoj Pandian Pandian and then cacikalavirkum series is putting pressure on his family

ஜெயலலிதா மறைவையடுத்து 30 நாட்களுக்கு மேல் அமைதியாக இருந்த பி.எச். பாண்டியன் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் அதன் பிறகு சசிகலாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் தொடர் நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிமுக பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் உண்மைதான். ஜெயலலிதாவை கொன்ற குற்றவாளிகளை மிக நெருங்கி விட்டோம் என பகீர் குண்டுகளை வீசியுள்ளனர்.

இதற்காக சட்ட வல்லுனர்களாக இருக்க கூடிய பி.எச் பாண்டியனும் அவரது மகன் மனோஜ் பாண்டியனும் கடந்த ஒருமாதத்திற்கு மேலாக ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அதன்படி ஒரு மிகபெரிய குழுவே மனோஜ் பாண்டியன் தலைமையில், இறங்கி வேலை செய்திருக்கின்றனர்.

செப்.22 ஆம் தேதி ஆம்புலன்ஸ் அழைத்ததில் இருந்து அந்த ஆம்புலன்ஸ் ஓட்டிய டிரைவரிடம், ஆரம்பித்து டிச..5 ஆம் தேதி ஜெயலலிதாவின் உடலை மீண்டும் போயஸ் கார்டன் கொண்டு சென்ற ஆம்புலஸ் டிரைவர் வரை தீவிரமாக விசாரித்திருக்கிறார்களாம்.

குறிப்பாக, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் தொடர்புகளை வைத்து அப்போலோவில் 72 நாட்கள் நடைபெற்ற மாற்றங்கள் குறித்து அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டுள்ளதாம்.

அப்போலோவில் இருந்த 27 சிசிடிவி கேமாராக்கள் அவசர அவசரமாக அகற்றப்பட்ட போட்டோக்கள், ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்ட போது நடந்த விஷயங்கள் தொடர்பாகவும், சிங்கப்பூர் மற்றும் லண்டன் மருத்துவமனைகளுக்கு ஜெயலலிதாவை கொண்டு செல்வது குறித்து முதலில் முடிவு செய்தபடி நடக்காமல் எதனால் பின் வாங்கினார்கள் என்பது போன்ற பல சம்பவங்கள் குறித்து நடந்த உண்மை விவரங்களை ஆதாரத்தோடு திரட்டி உள்ளார்களாம்.

இதையடுத்தே பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள் பி.எச்.பாண்டியன் மற்றும் மனோஜ் பாண்டியன்.

5 வருடங்களுக்கு முன்பு சசிகலாவால் ஓரங்கட்டபட்ட பி.எச். பாண்டியன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் அடிபட்ட பாம்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை பழிவாங்க துடிக்கின்றனராம்.

இந்த ஆதாரங்களை வைத்து கொண்டு மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் முறையிடப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சசிகலா குடும்பத்தினர் மீது மனோஜ் பாண்டியன் பி.எச்.பாண்டியன் ஆகியோர் அள்ளி வீசும் குற்றசாட்டுகளால் திகைத்து போயுள்ளனர் அதிமுகவினர்.