இவ்வளவு நாள் அமைதி காத்த முன்னாள் சபா நாயகர் பி.எச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன் ஆகியோர் களத்தில் குதித்துள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் தந்தையும் மகனும், பேட்டி அளித்தனர்.
சட்டம் படித்த கிரிமினல் வழக்கறிஞரான எனக்கு ஒரு விஷயத்தை எப்படி அணுக வேண்டும் என தெரியும். பத்திரிகையில் வந்த செய்திகளின் அடிப்படையில், ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கு ஏற்பட்ட கைகலப்பில் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டிருக்கிறார்.

அப்போது எந்த அசம்பாவிதமும் நடந்துவிட கூடாது என்பதற்காக தான், அப்பல்லோவில் அனுமதித்தார்கள் என்பது என்னுடைய அனுமானம்.
பின்னர் நான் அப்பல்லோ மருத்துவமனை சென்றேபோது, காக்கி சட்டை போட்ட ஒரு காவலர் கூட அங்கு இல்லை அதை நான் அதிர்ச்சியோடு பார்த்தேன்.
சுய நினைவோடு இருந்தார் என லண்டன் டாக்டர் பீலே சொன்ன நிலையில், அதற்கு மாறாக பிஎச் பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, ஜெயலலிதா சுயநினைவு இன்றி மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார் என தெரிவித்தார்.

மருத்துவமனைக்கு தான் சென்றபோது, உண்மையை யாருமே தெரிவிக்கவில்லை. 2வது மாடிக்கு லிப்டில் சென்றால், லிப்டை விட்டு இறங்கி உடனே பாதுகாவலர்கள் வந்து மொய்த்து கொள்வர்கள். ஒரு அடி கூட முன்னேற விட மாட்டார்கள் என பி.எச் பாண்டியன் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
பி.எச்.பாண்டியன் மவுனம் கலைந்து அதிரடி கிளப்பியுள்ளதால், தமிழக அரசியலில் புதிய பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.
