சென்னை, தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ரவுடி கர்த்தா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ரவுடி கர்த்தா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னையில் தியாகராயநகர் பகுதியில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நள்ளிரவில் 3 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 3 மது பாட்டில்கள் மூலம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தியாகராயநகர் துணை ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதனையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. 

இதையடுத்து அந்த வீடியோ காட்சியை வைத்து நந்தனத்தை சேர்ந்த ரவுடி கர்த்தா வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தீவிரமாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வுக்கு பாஜக தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் வினோத் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.