Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் புதிய சட்ட மசோதா.. இன்று தாக்கல் செய்யும் முதல்வர் ஸ்டாலின்.!

நீட் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
 

Permanent exemption for Tamil Nadu from NEET exam .. Chief Minister to file new bill today.!
Author
Chennai, First Published Sep 13, 2021, 9:10 AM IST

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்தத் தேர்வால் ஏழை, எளிய, கிராமப் புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைப்பது சிரமங்கள் ஏற்படுகிறது. நீட் தேர்வு அச்சத்தால் இதுவரை 14 மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் முயற்சிகளை மேற்கொள்வோம் என்று தேர்தல் அறிக்கையிலும் ட் திமுக தெரிவித்திருந்தது. Permanent exemption for Tamil Nadu from NEET exam .. Chief Minister to file new bill today.!
அதன்படி ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு நியமித்தது. அந்தக் குழு இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை தயார் செய்து தமிழக முதல்வரிடம் வழங்கியிருக்கிறது. இதன்படி மருத்துவக் கல்வி சேர்க்கையில் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வினை புரிந்துகொள்வதற்கு புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முயற்சிக்கலாம் என்று அந்த அறிக்கையில் பரிந்துரை செய்தது.Permanent exemption for Tamil Nadu from NEET exam .. Chief Minister to file new bill today.!
இந்நிலையில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று நிறைவடைய உள்ள நிலையில், நீர் தேர்வுக்கு எதிராக புதிய சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். இன்றைய தினமே இந்த சட்ட மசோதா ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்றப்பட உள்ளது. பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Follow Us:
Download App:
  • android
  • ios