ஹெச்.ராஜாவுக்கு சுயக்கட்டுப்பாடு இல்லை என்றும் அவருக்கு அதிகமாக கோபம் வருகிறது என்றும் இந்தியாவுக்கே சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததுபோல் பேசி வருவதாக எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் அணி சார்பில், தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்று சமூக வலைதள ஆதரவாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி விழுப்புரத்தில் இன்று நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி தினகரன் கலந்துக் கொண்டு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். 

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் தலைமையில், கலந்துரையாடல் நிகழ்ச்சி விழுப்புரத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், சமூக வலைத்தள ஆதரவாளர்கள் கலது கொண்டனர். இந்த கூட்டத்துக்குப் பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களைச்
சந்தித்தார்.

பெரியார் சிலை உடைக்கப்படும் என நாகரிகமற்ற முறையில் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். அவருக்கு சுயகட்டுப்பாடு இல்லை. அதிகமாக கோபம் வருகிறது. இந்தியாவுக்கே சுதந்திரம் வாங்கி கொடுத்தது போல் பேசி வருகிறார். பெரியார் சிலை மேல் கை வைத்தால் என்ன ஆகும் என தெரியாமல் பேசுகிறார். பெரியார் சிலை மீது கை வைத்தால் தமிழகம் கொதித்தெழும். 

ஏதாவது கலவரம் செய்து கட்சியை வளர்க்க பார்க்கிறார். தமிழகத்தில் இதுவரை எந்த கலவரமும் இல்லாமல், அமைதி பூங்காவாக உள்ளது. இதனை கெடுத்திடவே, இதுபோன்ற கலவரத்தை ஏற்படுத்த அவர் பேசி வருகிறார். அவருக்கு நாக்கில் சனி அமர்ந்துள்ளதால் தான் இவ்வாறு பேசி வருகிறார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுக உடைய காரணமாக இருந்தவர்கள், ஜெயலலிதாவை எதிர்த்தவர்கள், அவரால் புறக்கணிக்கப்பட்டவர்களைக் கொண்டு ரஜினி கட்சி நடத்தி வருகிறார். தமிழகத்தில் வெற்றிடத்தை நிரப்புவேன் என ரஜினி கூறுகிறார். அதை மக்கள்தான் கூற வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ள கோடிக்கணக்கிலான பணத்தை அவரிடம் தான் கொடுத்து வைத்துள்ளேன். அதை கேட்கதான் வந்தேன். தர மறுக்கிறார். முதுமை தலைவர் இதுபோன்று பேசுவது அழகல்ல, அவரை போன்று நானும் பேசினால் நன்றாக இருக்காது. அவ்வாறு கோடி, கோடியாக இருந்தாலும் அதனை மக்களுக்கு கொடுக்கவே வந்துள்ளேன் என்று தினகரன் கூறினார்.