பெங்களூரு சிறையில் சசிக்கலாவிற்கு எந்த சலுகையுடம் வழங்கவில்லை என்றும் அவரும் அதை விரும்பவில்லை என்றும் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்தில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொது செயலாளர் சசிக்கலாவிற்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை அடையாறில் உள்ள அதிமுக துணைப்பொது செயலாளர் டிடிவி தினகரனை வெற்றிவேல் எம்எல்ஏ சந்தித்து பேசினார்.

பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெங்களூர் சிறையில் சசிக்கலாவிற்கு எந்தவித சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட வில்லை எனவும், அப்படியே வழங்கினாலும் அதை அவர் ஏற்றுக்கொள்ள விரும்ப வில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் பெங்களூரில் இருந்து சென்னை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியபோது கூட அவர் அதற்கு சம்மதிக்க வில்லை என்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக கூறுவதெல்லாம் பொய் என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் காவேரி நீர் பிரச்சனை இருந்து வரும் வேளையில் எப்படி சிறப்பு சலுகைகள் வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.