வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் ஏ.சி.சண்முகம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அமைச்சர் தங்கமணி  கூறினார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் ஏ.சி.சண்முகம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் திமுகவும், அதிமுகவும் கடுமையாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டுள்ள அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’திமுக செய்த பொய் பிரச்சாரத்தை நம்பி பொது மக்கள் ஏமாந்து விட்டனர். தற்போது உண்மை தெரிந்து அதிமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். ஆகையால் அதிமுக சார்பாக களமிறக்கப்பட்டுள்ள ஏ.சி.சண்முகம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என அவர் தெரிவித்துள்ளார்.