Asianet News TamilAsianet News Tamil

மக்களே கொரோனாவை விட இது கொடுமையானது.. ரொம்ப கவனமா இருங்க.. அலறும் ராதாகிருஷ்ணன்.

அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றுக்கான படுக்கைகள் 4% மட்டுமே நிரம்பியுள்ளது. நோய் பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையிலும் நோய்க்கான பாதுகாப்பு நெறிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றார். கொரோனா நோய் அல்லாத பிற தொற்றா நோய்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கபட்டு வருகிறது. 

People this is worse than Corona .. Be very careful .. Radhakrishnan is screaming.
Author
Chennai, First Published Feb 7, 2022, 11:48 AM IST

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையிலும் கொரோனா அல்லாத பிற தொற்றா நோய்கள் மீதும் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் சாலை விபத்துகளில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளை விட இந்தாண்டு குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொடர்ந்து தனது கொடூர மூகத்தை காட்டி வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் உடன் டெல்டா வகை வைரஸ் பரவல் மூன்றாவது அலையை ஏற்படுத்தியுள்ளது. 3 வது அலை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சிய நிலையில் அது மிதமான தாக்கத்துடன் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைய தொடங்கியுள்ளது. இது பொதுமக்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு போன்றவை தளர்த்தப்பட்டுள்ளது எனவே மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார். தற்போது இரண்டாவது அலை, மூன்றாவது அலையால் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு விழுக்காடு அதிக அளவு குறைந்ததற்கு காரணம் தடுப்பூசி செலுத்தி கொண்டதே  என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

People this is worse than Corona .. Be very careful .. Radhakrishnan is screaming.

அதேபோல் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற வழிகாட்டு நெறிகளை மக்கள் ஓரளவு பின்பற்ற தொடங்கியதுடன் வைரஸ் கட்டுக்குள் வர காரணம் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்நிலையில்தான் சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரொனா நோயாளிகள் பிரிவினை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.  முனனதாக செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது, 

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக  குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் விழுக்காடு 5 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது. ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மட்டும் 10 விழுக்காட்டுக்கும் மேல் தொற்று பரவி வருகிறது. கோயம்புத்தூர், தேனி, நாமக்கல், ஈரோடு, ஊட்டி, மற்றும் கேரளா மாநிலத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் தொற்று பரவாத வண்ணம் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

People this is worse than Corona .. Be very careful .. Radhakrishnan is screaming.

அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றுக்கான படுக்கைகள் 4% மட்டுமே நிரம்பியுள்ளது. நோய் பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையிலும் நோய்க்கான பாதுகாப்பு நெறிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றார். கொரோனா நோய் அல்லாத பிற தொற்றா நோய்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கபட்டு வருகிறது. குறிப்பாக பெண்களைவிட ஆண்களுக்கு புற்றுநோய் உட்ப்பட அதிகப்படியான நோய் பரவி வருகிறது. ஆகையால் தொற்றா நோய்கள் மீதும் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கூறினார். 

தமிழ்நாட்டில் 1 கோடியே 6 லட்சம் பேர் இதுவரை இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர் இது வேதனை அளிக்கிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 4.30 லட்சம்  பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்புசி போடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் பொதுமக்கள் தீவிரத்தை உணர்ந்து கட்டாயம் தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொள்ள வேண்டும். இதற்க்கான விழிப்புணர்வு பிரச்சாரம் சுகாதாரத்துறை மூலம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios