Asianet News TamilAsianet News Tamil

மக்களே.. ஒமைக்ரானில் இருந்து தப்பிக்கணுமா..?? இந்த ஒன்றை மட்டும் செய்யுங்கள்.. WHO விஞ்ஞானி ஈசி ஐடியா..

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் டி செல்களில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது தெரியவந்திருக்கிறது, இந்த நோய் எதிர்ப்பு சக்தி ஒமைக்ரானுக்கு எதிராக சிறப்பாக வேலை செய்கிறது. அதேநேரத்தில் மருத்துவமனைகளில் நெரிசல், ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சினை என எதுவும் இல்லாமல் இருப்பது ஒரு நல்ல அறிகுறி.

People .. this is the only thing that will save us from Omicron .. WHO scientist Alert..
Author
Chennai, First Published Dec 30, 2021, 1:08 PM IST

தடுப்பூசியால் மட்டுமே ஒமைக்ரானிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் கூறியுள்ளார். தடுப்பூசி சிரித்துக்கொண்டு விளக்கு ஒருவேளை மைக்ரான் ஏற்பட்டாலும் அது அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்ற முயன்றும் அவர் கூறியுள்ளார் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களையும் மைக்ரான் விட்டுவைக்கவில்லை என பலரும் அதிர்ச்சி தெரிவித்து வரும் நிலையில், அவரின் இந்த கருத்து ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. 150க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்த வைரசால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசியால் மட்டுமே இந்த வைரஸில் இருந்து தப்பிக்க முடியும் என்ற முடிவுடன் ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந் நிலையில் இந்தியா ஒன்றுக்கு நான்கு தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளது. அதில் இரண்டு தடுப்பூசிகள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்துவருகிறது. தடுப்பூசிகள் அனைத்தும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.  ஆனால் கொரோனா வைரஸ் என்பது அடிக்கடி உருமாறி, அடுத்தடுத்து படிநிலைகளில் தன்னை தகவமைத்து வருகிறது. எனவே இதை முழுவதுமாக கட்டுப்படுத்துவது விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.

People .. this is the only thing that will save us from Omicron .. WHO scientist Alert..

இந்தியாவில் டெல்டாவகை வைரசாக உருமாறிய கொரோனா இரண்டாவது அலையாக உருவெடுத்தது. அதனால் மிகப்பெரிய உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டது. தற்போது  தென்னாப்பிரிக்காவில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒமைக்ரான்வகை வைரஸ் 12 நாடுகளுக்கும் அதிகமாக பரவி உள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக இது சமூக பரவலாக மாறிவிட்டது என்றும் கூறப்படுகிறது. அதாவது சென்னையில் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு ஒரு மைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. அவர் எந்த வெளிநாட்டு தொடர்பு இல்லாதவர். ஆனால் அவருக்கு எப்படி ஒமைக்ரான் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் செவிலியர்கள், உட்பட 37 பேருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இது சமூக பரவலாக மாறி இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. 

இந்நிலையில் நாடு முழுவதும் இந்த வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட 23 மாநிலங்களில் இந்த ஒமைக்ரான் பரவியுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் வர்த்தக தலைநகரான மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டிலேயே டெல்லியில், ஒமைக்ரான் வேகமாக பரவி வருவதால் அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 180 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 961 ஆக  உள்ளது டெல்லியில் 263 பேருக்கும், மகாராஷ்டிராவில் 252 பேருக்கும், குஜராத்தில் 97, ராஜஸ்தானில் 69, கேரளாவில் 65, தெலுங்கானா 62, தமிழ்நாடு 45 பேருக்கும் ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 961 பேர் பாதிக்கப்பட்டுள்ளதில்  320 பேர் குணமடைந்துள்ளனர்.

People .. this is the only thing that will save us from Omicron .. WHO scientist Alert..

அதை நேரத்தில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது  பலரையும் பீதி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே ஒரே வழி என உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் கூறியுள்ளார். ஒமைக்ரான் தொடர்பாக தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் பல தகவல்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஜெனிவாவில் நடைபெற்ற காணொளி காட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சௌமியா சாமிநாதன், தடுப்பூசிகளுக்கு ஒமைக்ரானை எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் டி செல்களில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது தெரியவந்திருக்கிறது, இந்த நோய் எதிர்ப்பு சக்தி ஒமைக்ரானுக்கு எதிராக சிறப்பாக வேலை செய்கிறது. அதேநேரத்தில் மருத்துவமனைகளில் நெரிசல், ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சினை என எதுவும் இல்லாமல் இருப்பது ஒரு நல்ல அறிகுறி.

தடுப்பூசி போட்டுக் கொள்வது கடுமையான நோய் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்கும். உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் செலுத்தாதவர்களை ஒமைக்ரான் பாதிக்கிறது. ஆனாலும் ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசி செயல்பட்டு அவர்களை மரணத்திலிருந்து காக்கிறது என்றும் சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார். ஆகவே யாரேனும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இருந்தாலும் உடனே தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios