மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், இன்று திருச்சியில் நடைப்பெற்ற 2 ஆவது  கட்சிக்கூட்டத்தை நடத்தினார்.

இதற்காக நேற்று சென்னை எழும்பூரில் இருந்து வைகை ரயில் மூலம் திருச்சி சென்ற கமலுக்கு, சென்னையிலும் சரி திருச்சியிலும் சரி மாபெரும் வரவேற்பு அளிக்கப்  பட்டது.

முன்னதாக இந்த கூட்டத்தில் கட்சி நடவடிக்கை குறித்தும்,அடுத்தகட்டமாக என்ன  செய்ய வேண்டும், கட்சி கொள்கைகளை மக்களிடம் எடுத்து செல்வது குறித்த முக்கிய திட்டங்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது

இந்நிலையில்,தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  வேண்டும் எனவும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவும்,மக்களின் உணர்வுகளை  புரிந்துகொண்டு,இன்றைய கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்.? என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம்  நடைபெற்றது.

இதில் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் மட்டுமின்றி,பெரும்பாலான பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.