மீனவர்களுக்கான எச்சரிக்கை :மத்திய அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவும்  காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த  24  மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றாழ்த்த பகுதியாக  உருவாக வாய்ப்புள்ளது.  

01.04.2021 முதல் 04.04.2021 வரை; தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், 05.04.2021: தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக தெளிவாக காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 40 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு: தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி வீசுவதால் 01.04.2021 முதல் 04.04.2021 வரை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட நான்கிலிருந்து ஆறு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். 

05.04.2021 முதல் 07.04.2021 வரை: கரூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட நான்கிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இதன் காரணமாக ஒருசில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும். பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் முற்பகல் 1200 முதல் பிற்பகல் 0400 வரை திறந்தவெளியில் வேலை செய்வது மற்றும், ஊர்வலம் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். 05.04.2021 முதல் 07.04.2021 வரை: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட மூன்றிலிருந்து நான்கு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை : மத்திய அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றாழ்த்த பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக 01.04.2021,02.04.2021 : அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். 01.04.2021 முதல் 03.04.2021 வரை: குமரிக்கடல், மன்னார் வளைகுடா, மற்றும் தென்மேற்ற்கு வங்க கடல் பகுதியை ஒட்டிய தமிழக கடற்பகுதிகளில் பகுதிகளில் பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 01.04.2021,02.04.2021: மேற்கு மத்திய வங்கக்கடல் ஒட்டிய தெற்கு ஆந்திர கடற் பகுதிகளில் மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இருபகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.