தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி வாழ்க என கோஷமிட்ட ஆர்.பி.உதயகுமார் தலைமையிலான அதிமுகவினருக்கும் அப்பகுதி மக்களும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் 115-வது பிறந்த நாள் மற்றும் 60-வது குருபூஜையை விழா வருகிற 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று காலையில் தொடங்கி உள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் தேவர் நினைவிடத்தில் மாலை அணிந்து மரியாதை செலுத்தினர்.

இதே போல பல்வேறு கட்சியினர் தேவர் சமுதாய மக்களும் மரியாதை செலுத்திக்கொண்டிருந்தனர். அப்போது ஆர்.பி.உதயகுமார் தலைமையில் வந்த அதிமுகவினர் எடப்பாடியார் வாழ்க வாழ்க என முழக்கமிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்.பி.உதயகுமாரை வெளியேறச் சொல்லி கோஷமிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
