Asianet News TamilAsianet News Tamil

தமிழக மக்களே உஷார்.. அடுத்த 5 நாட்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..9 ஆம் தேதி அடிச்சி ஊற்றுமாம்.

09.01.2022: தென் தமிழக மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  

People of Tamil Nadu are alert .. anything can happen for the next 5 days .. on the 9th will be rain.
Author
Chennai, First Published Jan 5, 2022, 11:51 AM IST

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் வரும்  9ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக வானிவை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :- 

05.01.2022: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 06.01.2022, 07.01.2022: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 08.01.2022: தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

People of Tamil Nadu are alert .. anything can happen for the next 5 days .. on the 9th will be rain.

09.01.2022: தென் தமிழக மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் மூடுபனி எச்சரிக்கை : 05.01.2022 முதல் 06.01.2022: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும். 

People of Tamil Nadu are alert .. anything can happen for the next 5 days .. on the 9th will be rain.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை 29 குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லைமீனவர்களுக்கான எச்சரிக்கை: 05.01.2022, 06.01.2022: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரியகையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
 

Follow Us:
Download App:
  • android
  • ios