மக்களிடம் நமக்கு எதிர்ப்பு கிடையாது ஆனால் நம்முடைய உழைப்புதான் குறைந்துவிட்டது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.
மக்களிடம் நமக்கு எதிர்ப்பு கிடையாது ஆனால் நம்முடைய உழைப்புதான் குறைந்துவிட்டது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். அதிமுகவினர் எறும்பு போல் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றும், திமுக அரசின் குளறுபடிகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதிமுக அம்மா பேரவை செயலாளர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் சென்னை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. அதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். அம்மா பேரவை மாநிலச் செயலாளர் ஆர்.பி உதயகுமார் அதற்கு தலைமை தாங்கினார். கடந்த அதிமுக அரசின் சாதனைகள் புத்தகமாக வெளியிடப்பட்டது.

முன்னதாக பேசிய ஓ. பன்னீர்செல்வம் தற்போது உள்ள சூழ்நிலையில் தேர்தல் நடத்தினால் திமுக 10 இடத்தில் கூட வெற்றி பெறாது அந்த அளவிற்கு மக்கள் திமுக அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் என்றார். பின்னர் மேடையில் பேசி எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் மிக கடுமையாக விமர்சித்தார். அதன் விவரம் பின்வருமாறு:- தமிழகத்தில் அதிக ஆண்டு ஆட்சி செய்த இயக்கம் அதிமுக தான், இப்போதே திமுகவின் ஆட்சி எப்போது முடியும் என மக்கள் யோசிக்க தொடங்கி விட்டனர். திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர், அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களைதான் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இது எல்லாம் மக்கள் மத்தியில் நாம் எடுத்துச் சென்று சேர்க்க வேண்டும். ஆனால் மக்கள் மத்தியில் பொய்யான தகவல்களை பரப்பி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஊடகங்களும் பத்திரிக்கைகளும் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் திமுக அரசு காற்றோடு காற்றாக கலந்திருக்கும். தமிழகத்தில் கஞ்சா புழக்கம் தாராளமாக உள்ளது.

ஆன்லைன் விளையாட்டு தடை விதிக்க வேண்டும் என நாங்கள் அறிக்கை கொடுத்துளள்ளோம், ஆனா திமுக அரசு செவிடன் காதில் சங்கு ஊதியது போல இருக்கிறது வீடு வீடாக சென்று திமுக அரசு குளறுபடிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். துண்டுப்பிரசுரங்கள் வழங்குங்கள், 25 வயது முதல் 45 வயது உள்ளவர்களை காட்சிகள் இணையுங்கள். படித்தவர்களை காட்சிகள் சேருங்கள், லஞ்ச லாவண்யம் அதிகமாகிவிட்டது, ஒரு வழி பாதை போல தேசிய நெடுஞ்சாலை போல கருணாநிதி குடும்பத்திற்கு லஞ்சம் நேரடியாக செல்கிறது. அமைச்சர்களுக்கு கூட செல்லவில்லை என கூறுகிறார்கள், ஊழல் செய்வதில் ஸ்டாலின் முதன்மையானவராக உள்ளார். இந்த ஆட்சியில் பாலியல் கொடுமைகள் அதிகரித்துவிட்டது, நான் தேனீக்களை போல, எறும்புகளைப் போல சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். இந்த ஆட்சியில் மின்சாரம் எப்போது போகும் எப்போது வரும் என்று எவருக்குமே தெரியாது. மக்களிடம் எப்போதும் நமக்கு எதிர்ப்பு கிடையாது. நம்முடைய உழைப்பு குறைந்துவிட்டது இவ்வாறு அவர் கடிந்துகொண்டார்.
