அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், சசிகலா ஆதரவாளருமான அலெக்சாண்டரை இளைஞர் ஒருவர் தொலைபேசியில் வாட்டி எடுத்த ஆடியோ பதிவு  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது...

ஆர்.கே.நகரில் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக ஒரு புறம் அனல் கூட்ட, ஓ.பி.எஸ். மற்றொரு புறம் தெறிக்க விட, டிடிவி தினகரன் தரப்போ ஆங்காங்கே தொப்பியை கொடுத்துக் கொண்டும் வாங்கிக் கொண்டும் இருக்கிறது. 

சசிகலா ஆதரவு நட்சத்திரப் பேச்சாளர் சி.ஆர்.சரஸ்வதி மீது நேற்று செருப்பு வீச்சு முட்டை வீச்சு சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. 

இந்தச் சூழலில் டிடிவி தினகரன் தரப்பினர் தங்களது  பிரச்சாரத்தில் சசிகலாவின் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். சசிகலா புகைப்படம் கொண்ட  போஸ்டர்  பெயரளவுக்கு கூட தொகுதியில் காணமுடியவில்லை...

இந்தச் சூழலில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டரை சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். 

முதலில் சம்பிரதாயமாக வணக்கம் கூறி தொடங்கிய பேச்சு போகப் போக ரணகளமாக மாறியது.. பிரச்சாரத்தில் சசிகலாவின் பெயரையும் புகைப்படத்தையும் ஏன் பயன்படுத்தவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அலெக்சாண்டர்  திணறத் தொடங்கினார்.

கூவத்தூர் சொகுசு விடுதியில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருந்த போது, இது போன்ற பல ஆடியோ பதிவுகள் வெளியாகின.  உரையாடல்கள் பதிவு செய்யப்படுகிறது என்பதை அறியாமல் எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மக்களிடம் பொறிந்து தள்ளினர். இந்த ஆடியோ பரப்பப்பட்டதும் உஷார் அடைந்த எம்.எல்.ஏ அலெக்சாண்டர் நீங்க நேர்ல வாங்க ப்ரதர் என்ற ஒரே வார்த்தையையே அந்த 3 நிமிட உரையாடல் முழுவதும் வடிவேல் காமெடி போல திரும்ப திரும்ப பேசியுள்ளார்.

பிரதர் நீங்க நேர்ல வாங்க, நீங்களும் நல்லவர், நானும் நல்லவன், நேர்ல வாங்க பிரதர், பேசி தீத்துக்கலாம்" என்ற அலெக்சாண்டரின் கிளைமேக்ஸ் பன்ச் அட டே ரகம்