வேலூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் உள்ள சிறு கூட்டுறவு சிறப்பங்காடியை திறப்பதற்காக அமைச்சர் செல்லூர் ராஜு அங்கு சென்று இருந்தார். விழாவை முன்னிட்டு, பெரும்பாலான மக்கள் அங்கு திரண்டு இருந்தனர்.

இந்நிலையில் செல்லூர் ராஜு வாணியம்பாடி சென்ற போது, அந்த வழியில் ரெட்டித் தோப்பு பகுதியில் பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு, செல்லூர் ராஜு 30 கோடி ரூபாய் செலவில் பாலம் அமைக்க 2 ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டும் ஏன் இன்னும் பணிகள் தொடங்கப்பட வில்லை என கூறி அமைச்சர் செல்லுர் ராஜுவை சிறைப்பிடித்தனர். பின்னர், காரில் இறங்கிய அவரை மக்கள், அவர் கையை  பிடித்து இழுத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் விரைவில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என, அமைச்சர் உறுதி அளித்த பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரரப்பு ஏற்பட்டது..