Asianet News Tamil

மக்களே உஷார்... அடுத்த 4 நாட்களுக்கு இந்த பகுதிகளில் இடி, மின்னல் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை.

வட மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 23 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். 19.07.2021 முதல் 23.07.2021 வரை: தெற்கு வங்க கடல், மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 

People be alert ... thunder and lightning in these areas for the next 4 days .. Meteorology warning.
Author
Chennai, First Published Jul 19, 2021, 3:18 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தென்மேற்கு பருவக்காற்று  காரணமாக தமிழ்நாட்டில் 19.07.2021: நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

20.07.2021: நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

21.07.2021 முதல் 23.07.2021: நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை : வட மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 23 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். 19.07.2021 முதல் 23.07.2021 வரை: தெற்கு வங்க கடல், மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

19.07.2021 முதல் 20.07.2021 வரை:  தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லவேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள். என எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios