Asianet News TamilAsianet News Tamil

மக்களே உஷார்.. அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். வானிலை அதிர்ச்சி.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகை பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சியானது நேற்று இரவு முதல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில நீடிக்கின்றது.

People be alert .. The maximum temperature may be up to 3 degrees Celsius above normal. Weather shocking.
Author
Chennai, First Published Mar 30, 2021, 1:13 PM IST

30.03.2021 முதல் 03.04.2021 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும்  வறண்ட வானிலையே நிலவும் எனவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி  நேரத்திற்கு வானம் பொதுவாக தெளிவாக காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 26  டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு: 

02.04.2021, 03.04.2021:  தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி வீச சாத்தியக்கூறுகள் உள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில்  மழை அளவு (சென்டிமீட்டரில்): பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 3 சென்டி மீட்டர் மழையும், ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), சித்தார் (கன்னியாகுமரி) தலா 2 சென்டி மீட்டர் மழையும் , சங்கரன்கோயில் (தென்காசி), குழித்துறை (கன்னியாகுமரி), தென்காசி, ராஜபாளையம் (விருதுநகர்), சிவலோகம்  (கன்னியாகுமரி) தலா 1 சென்டி மீட்டர் மழையும். பதிவாகி உள்ளது. 

People be alert .. The maximum temperature may be up to 3 degrees Celsius above normal. Weather shocking.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : 

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி ( upto 4.5 kilometer) அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், அதனை தொடர்ந்து 24  மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றாழ்த்த பகுதியாக  உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக 30.03.2021,31.03.2021 : தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .01.04.2021: அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

People be alert .. The maximum temperature may be up to 3 degrees Celsius above normal. Weather shocking.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகை பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சியானது நேற்று இரவு முதல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில நீடிக்கின்றது. இதன் காரணமாக  30.03.2021: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப் படுகிறார்கள். 02.04.2021, 03.04.2021: குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் மாலத்தீவு  பகுதிகளில் பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இருபகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.என எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios